திருப்பூர் : சிவலிங்க திருமேனிக்கு மனதில் கோவில் கட்டிய, பூசலார் நாயனார் குருபூஜை நேற்று நடந்தது. திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 63 நாயன்மார் குருபூஜை, அந்தந்த நட்சத்திர நாளன்று, தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அர்த்தசாம பூஜை சிவனடியார் திருக்கூட்டத்தினர், ஒவ்வொரு நாயன்மாருக்கும் குருபூஜை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில், ஐப்பசி அனுஷ நட்சத்திரமான நேற்று, பூசலார் நாயனார் குருபூஜை நடந்தது.பூசலார் நாயனாருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்த. சிவனடியார்கள், திருமுறை பாடல்களை பாடினர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.