பதிவு செய்த நாள்
31
அக்
2019
11:10
பழநி, கந்தசஷ்டியை முன்னிட்டு, பழநி முருகன் கோயில் நாளை மறுநாள் (நவ.,2ல்) பகல் 3:15 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
காலை 10:00மணிக்கு மேல் ரோப்கார், வின்ச் இயங்காது.பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டிவிழா அக்.,28ல் முதல் நவ.,3 வரை நடக்கிறது. நாளை மறுநாள் (நவ.,2ல்) சஷ்டி அன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. இதற்காக மலைக்கோயிலில் வழக்கமாக மாலை 5:30மணி நடக்கும் சாயரட்சைபூஜை, பகல் 1:30 மணிக்கே நடைபெறும். மரிக்கொழுந்து அம்மனிடம் பராசக்திவேல் வாங்கியவுடன், சன்னதி நடை சாத்தப்படுகிறது.இதனால் அன்று காலை 10:00மணிக்கு மேல் ரோப்கார், வின்ச் இயங்காது. இரவு தங்கரதப் புறப்பாடும் கிடையாது. மாலை 6:00 மணிக்கு சின்னக்குமாரசுவாமி கிரிவீதியில் சூரன்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 3ல் மலைக்கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களில் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயச்சந்திர பானுரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.