பதிவு செய்த நாள்
31
அக்
2019
03:10
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு நடனக்காட்சி அருளினார்.
நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு நான்காம் நாளான இன்று அருணகிரியாருக்கு நடன காட்சி அருளும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் கொடிமர பூஜை, விநாயகர் பூஜை, கலச பூஜை, சத்ரு சம்ஹார யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், திருமஞ்சணம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. இதையடுத்து லட்சார்ச்சனை நடந்தது. இதன் பிறகு நடன கோலத்தில் எழுந்தருளிய சுவாமி புறப்பாடாகி வலம் சென்றார். விநாயகர் சன்னதி அருகே முருக பெருமான் அருணகிரியாருக்கு நடனக் காட்சி அருளும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை முருக பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நவ.,2ல் கிரிவல பாதையில் சூரசம்ஹா நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.