பதிவு செய்த நாள்
31
அக்
2019
03:10
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு நவக்கிரக நாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று 29ல், அதிகாலை நடை திறக்கப்பட்டு, 3:49 மணிக்கு நவக்கிரக குரு பகவானுக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.காலை 9:30 மணிக்கு சன்னதி வளாகத்தில் யாக சாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, 108 மூலிகைகளால் குருபகவான் மூலமந்திரமும் தொடர்ந்து, கடம் புறப்பாடாகி மதியம் 12:00 மணிக்கு நவக்கிரக நாயகரான குருபகவானுக்கு கலச அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.செஞ்சிசெஞ்சி காமாட்சி அம்மன் சமேத ஏகாம் பரேஸ்வரர் கோவில் மற்றும் சந்தை மேடு ஐயப்பன் கோவிலில் குரு பகவானுக்கு அதிகாலை 2:00 மணிக்கு மகா அபிஷேகமும், 3:49 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து குரு பெயர்ச்சியால் பயன்பெறும் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிகளுக் கும், குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.