பெண்ணாடம்: அய்யப்ப சேவா சமாஜ பிரசார ரதயாத்திரை ஊர்வலத்திற்கு பெண்ணாடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பில், ரதயாத்திரை ஊர்வலம், மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. அதன்படி, பெண்ணாடத்திற்கு நேற்று பிற்பகல் 12:15 மணியளவில் ரத யாத்திரை வந்தது. அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, முருகன்குடி, கருவேப்பிலங்குறிச்சி வழியாக விருத்தாசலத்திற்கு ரத யாத்திரை புறப்பட்டு சென்றது. பெண்ணாடம் பகுதி அய்யப்ப சேவா சங்க பக்தர்கள் பங்கேற்றனர்.