Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் சூரசம்ஹார விழா: பக்தர்கள் ... சென்னையில் சூரசம்ஹார விழா கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கந்த சஷ்டி: சூரனை வதம் செய்த சுப்ரமணிய சுவாமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2019
01:11

பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவில், முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் காட்சியை பக்தர்கள் கண்டுகளித்தனர்.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா கடந்த, 28ம் தேதி துவங்கியது. நேற்றுமுன்தினம்  முருகப்பெருமான் வேல் வாங்கும் உற்சவம் நடந்தது.

நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.எஸ்., கோவில் வீதி கிழக்கு வழியாக சென்று, சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பில், கஜமுகா சூரனை வதம் செய்தார்.தெப்பக்குளம் வீதி, வெங்கட்ரமணய்யர் சந்திப்பில்,  சிங்கமுகாசூரன்; வெங்கட்ரமணய்யர் வீதி, ராஜாமில் ரோடு சந்திப்பில் பானுகோபன், உடுமலை ரோடு தேர்நிலைப் பகுதியில் சூரபத்மனையும், முருகப்பெருமான் வதம் செய்தார்.இதில், திரளாக பங்கேற்ற பக்தர்கள், சூரனை வதம் செய்யும் போது, பக்தி பரவசத்தில்  அரோகரா, அரோகரா என கோஷமிட்டனர்.சூரசம்ஹார விழாவையொட்டி, விரதமிருந்த பக்தர்கள், வாழைத்தண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் பழவகைகள் கொண்டு பிரசாதம் தயாரித்து, சுப்ரமணியசுவாமிக்கு படைத்து விரதம் முடித்தனர்.இன்று காலை, 10:00  மணிக்கு மகா அபிேஷகமும், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும்; நாளை மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்வச பூர்த்தியும் நடக்கிறது.கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், நேற்று மாலை சூரனை வதம் செய்யும் முக்கிய  நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது.உற்சவர் வேலாயுசாமி சப்பரத்தில் எழுந்தருள, உடன் சஷ்டி குழுவினர் மற்றும் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சிவலோகநாதர் கோவில் அருகே கஜமுகாசூரன் வதம் நடந்தது.தேரோடும் வீதியில் சிங்கமுகன் வதம்;  கிருஷ்ணசாமி புரத்தில் பானுகோபன் வதம்; பொன்மலை அருகே, சூரபத்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

அதன்பின், சூரசம்ஹாரம் நடந்த மலையை சுற்றி வேலாயுதசாமி மீண்டும் ஒரு முறை கிரிவலம் வந்து, மலையேற்ற நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த பக்தர்களுக்கு தண்டு பிரசாதம் வழங்கப்பட்டது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று மதியம், எம்.ஜி.ஆர்.,  நகர் மாரியம்மன் கோவிலில் அம்மனிடம் வேல்வாங்கும் உற்சவம் நடந்தது. மாலையில், சுப்ரமணிய சுவாமி, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.நாளை காலை, 11:00 மணிக்கு முருகன், வள்ளி தெய்வாணை திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar