கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை சூரசம்ஹார விழா விமரிசையாக நடந்தது. கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கடந்த, 25ல் கந்த சஷ்டி விழா துவங்கியது. தினமும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்து பூஜை நடந்தது. நேற்று மாலை, 5:30 மணிக்கு, நான்கு மாட வீதிகளிலும் சூரனை, முருகபெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, சுவாமிக்கு மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.