Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிம்மருக்கு இப்படியும் ஒரு பெயர்! ராம பக்தன் அனுமனுக்கு தரிசனம் தந்த நரசிம்மர்! ராம பக்தன் அனுமனுக்கு தரிசனம் தந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்மரும், சங்கரரும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஏப்
2012
04:04

இல்லற வாழ்வு பற்றியும் வாதிடும் நிலையைப் பெறுதற்காக ஆதிசங்கரர், தன் உடலை ஒரு காட்டு மரத்தில் மறைத்து விட்டு, இறந்துவிட்ட அமரசன் என்பவனின் உடலில் புகுந்து, சிலகாலம் கழித்து, அறிய வேண்டியது நிறைவானவுடன், தம் பழைய உடலைத் தேடிச் செல்கிறார். அப்போது, உடல் பாதி எரிந்து கொண்டிருந்தாலும் சங்கரர் அதனுள் புகுந்தவுடன் ஏற்பட்ட தாங்க முடியாத உஷ்ணத்தைத் தணிக்க, சுவர்ண நரசிம்மரைத் துதித்த பின்னரே முன்பிருந்த தேகப் பொலிவை மீளப் பெறுகிறார்.

ஒரு முறை ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம்  மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்தார். அங்கு ஒரு நாள் ஒரு காபாலிகன் வந்தான். சங்கரர் துர்மதங்களைக் கண்டித்து அத்வைதத்தை நிலைநாட்டி, வருவதைப் பார்த்து , தன் மதமும் போய்விடுமோ என்று பயந்து, எப்படியாவது அவரை ஒழித்துவிடவேண்டும் என்று நினைத்தான். அவன் சங்கரரிடம், நான் பல ஆண்டுகளாக இவ்வுடலுடன் கைலாயம் செல்ல எண்ணி பரமசிவனைக் குறித்து தவம் செய்து வருகிறேன். அவர் என் முன் தோன்றி, எல்லாம் அறிந்த ஒருவன் ஞானி அல்லது  சக்கரவர்த்தி இவர்களில் ஒருவருடைய தலையை எடுத்து அக்னியில் போட்டு ஹோமம் செய்தால் உன் எண்ணம் ஈடேறும் என்று அருளினார். ஆனால் இக்காலத்தில் சக்ரவர்த்தி தலை கிடைப்பதரிது. தாங்கள் ஒரு ஞானி. எல்லாமறிந்தவர். உங்கள் தலையை நான் வெட்டினால் உங்களுக்கு துக்கமேற்படாது. எனக்கும் காரியம் கைகூடும் என்று வேண்டினான். அவன் சொன்னதை புரிந்து கொண்ட சங்கரர், சிரித்துக் கொண்டே, தன் தலையை பலியாகக் கொடுக்க தமக்கு ஆட்சேபணை இல்லையென்று சொன்னார். தம் சீடர்களுக்குத் தெரியாமல் பைரவர் கோயிலுக்குத் தாம் வருவதாக கூறி, நள்ளிரவில் கோயில் இருந்த குகைக்குப் புறப்பட்டார். தன் குருவுக்கு ஏதோ ஆபத்து என்று பத்மபாதர் உணர்ந்தார். ஆகவே குருவைக் காப்பாற்றும்படி பகவான் நரசிம்மரை மனமுருக வேண்டிக் கொண்டார். நரசிம்ம மந்திரத்தில் சித்தி பெற்றிருந்த பத்மபாதர் தானே நரசிம்மமாகி சங்கரர் இருக்குமிடத்திற்கு குதித்து ஓடிவந்து காபாலிகன் மேல் பாய்ந்து அவன் மார்பை பிளந்து அவனைக் கொன்றார். நரசிம்மன் செய்த அட்டகாசத்தால் தியானம் கலைந்த சங்கரர் கண்ணைத்திறந்து பார்த்து நடந்ததை அறிந்து கொண்டார். இதனால் தான், கொலை செய்யப்படுவோமோ என பயப்படுபவரும், தீக்காயத்தால் அவதிப்படுபவர்களும், ஆதிசங்கரர் இயற்றிய கராவலம்பனத் துதியையும் பஞ்சரத்தினத்தையும் நரசிம்மர் வழிபாட்டில் மிக முக்கியமாகக் கருதுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை : பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் கார்த்திகை ஏகாதசி வைபவம் சிறப்பாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.கேரள மாநிலத்தின் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பித்தளை வேல் காணிக்கையாக ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக பவித்திர பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar