நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில், கந்தசஷ்டியை முன்னிட்டு திருக்கல் யாணம் நடந்தது.
நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு, சுப்பரமணியர்,தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடந்தது. கடந்த 28 ம் தேதி திங்கள் கிழமை மாலை 5:50 மணிக்கு கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி துவங்கியது. 31 ம் தேதி இரவு 7:00 மணிக்கு தாருகா சூரனை வதம் செய்தல் நடந்தது. 1ம் தேதி இரவு 8:00 மணிக்கு முருக பெருமான் காமாட்சியம்மனிடம் சக்திவேல் வாங்கி, சிங்கமுக சூரனை வதம் செய்தல் நடந்தது. நேற்று முன்தினம் 2ம் தேதி காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சூரபதுமன் வதம் செய்தல் நடந்தது. 8:00 மணிக்கு சக்திவேலுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுப்பரமணியர்,தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.