பதிவு செய்த நாள்
04
நவ
2019
02:11
விருத்தாசலம்:கந்த சஷ்டியை முன்னிட்டு, விருத்தாசலத்தில் நடந்த சூரசம்ஹார திருவிழா வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், அம்பாள், சண்முக சுப்ர மணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட் களால் சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மேல், செங்குந்தர் மடத்தில் இருந்து சூரன் அழைப்பு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சண்முக சுப்ரமணியர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, விருத்தாம்பிகை அம்மனிடம் சக்தி வேல் வாங்கி வரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, கிழக்கு கோபுர வாசலில் சூரனை வதம் செய்யும், சூரசம்ஹார விழா நடந்தது. கஜமுகம், சிங்கமுக சூரனை வதம் செய்யும், சம்ஹா ரம் நடந்தது. பின்னர், மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.