பதிவு செய்த நாள்
04
நவ
2019
02:11
நாமக்கல்: நாமக்கல், மோகனூர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்களில், கந்தசஷ்டி, சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது.
நாமக்கல்-மோகனூர் சாலையில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவி லில், ஆண்டு தோறும், கந்தசஷ்டி, சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, நேற்று (நவம்., 3ல்) சிறப்பாக நடந்தது. காலை, 6:30 மணிக்கு, கணபதி பூஜை, 7:00 மணிக்கு, சக்தி ஹோமம், சுப்ரமணியர் ஹோமம், சக்தி பூஜை, 8:30 மணிக்கு, சுவாமிக்கு, பால், தேன், பஞ்சாமிர்தம், திரவியம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, சந்தனக்காப்பு அலங்கா ரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இரவு, 7:00 மணிக்கு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், முருகப்பெருமான் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* மோகனூர், காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று (நவம்., 3ல்)காலை முதல், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. வெள்ளிக் கவசத்தில் சுவாமி எழுந்தரு ளினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந் தது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். மாவட்டம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.