நெல்லிக்குப்பம் விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2019 01:11
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் விநாயகர் கோவிலில் வள்ளி தேவசேனா சுமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் ரத்தினம் தெரு சக்தி விநாயகர் கோவிலில், கந்தசஷ்டி பூஜைகள் நடந்து வந்தது. கடந்த 2ம் தேதி, சூரசம்ஹார விழா நடந்தது. 3ம் தேதி சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை் நடந்தது. வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு வள்ளி தேவசேனா சமேதராய் சுப்ரமணியர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.