பதிவு செய்த நாள்
05
நவ
2019
02:11
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையும் அருகே, தென்திருப்பதி திருமலை வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இங்கு ஐப்பசி மாதத்தில் மலையப்ப சுவாமிக்கு புஷ்பயாகம் நடந்தது.நேற்று (நவம்., 4ல்) காலை, 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாதமும், விஸ்வரூப தரிசனமும், முதல் மணி ஏகாந்தம் ஆகிய பூஜைகள் நடந்தன.
அதைத்தொடர்ந்து புண்ணியாக வாஜனம் செய்யப்பட்டது.பின்பு, 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமிக்கு, துளசி, அரளி, சம்பங்கி, மல்லிகை, மனோரஞ்சிதம், செண் பகம், முல்லை, ஜாதி மல்லி, தாழம்பூ ஆகிய ஒன்பது வகையான மலர்களால், 11:30 மணி வரை புஷ்ப யாகம் செய்யப்பட்டது.இதில் அர்ச்சகர்கள் ’ஓம் நமோ பகவதே வாசுதேவய நமக, ஓம் நமோ நாராயணயா நமக என்ற மந்திரத்தை சொல்லி, பூக்களால் யாகம் செய்தனர். மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.