பதிவு செய்த நாள்
14
ஏப்
2012
12:04
ராமேஸ்வரம்:தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு, ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பகல் 10 .30 க்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் தங்கரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கினார்.
தொடர்ந்து, நான்குரத வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், சுவாமி சன்னதியில் நடந்த ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியில், உதயகுமார் குருக்கள் "நந்தன ஆண்டு பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன்னிலையில் வாசித்தார். பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன்கோயில், பத்ரகாளிஅம்மன் கோயில், உஜ்ஜயினி மாகாளி, துர்க்கை, ஏகாந்தராமர், கோதண்டராமர் கோயிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.