பதிவு செய்த நாள்
05
நவ
2019
04:11
* நவ.1, ஐப்பசி 15: முகூர்த்த நாள், ஐயடிகள் காடவர் கோன் குருபூஜை, மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம், சிக்கல் சிங்கார வேலர் தேர், இரவு உமாதேவியாரிடம் வேல் வாங்குதல், குமார வயலுார் முருகன் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், இரவு வெள்ளி மயில் வாகனம், வள்ளியூர் முருகன் உருகுச் சட்ட சேவை
* நவ.2, ஐப்பசி 16: கந்த சஷ்டி, சூர சம்ஹாரம், திருக்குருகைப் பிரான் சேனை முதலியார் திருநட்சத்திரம், சிக்கல் சிங்கார வேலர் இந்திர விமானத்தில் பவனி, குமார வயலூர் முருகன் காலையில் சக்திவேல் வாங்குதல், வள்ளியூர் முருகன் வெள்ளி சாற்றியும், மாலையில் பச்சை சாற்றி பஞ்சமூர்த்திகளுடன் பவனி
* நவ.3, ஐப்பசி 17: முகூர்த்த நாள், சகல முருகன் கோயில்களில் தெய்வானை திருக்கல்யாணம், சிக்கல் சிங்கார வேலர் காலை சூர்ணோற்ஸவம், இரவு தெய்வானையுடன் வெள்ளித்தேரில் பவனி, குமார வயலூர் முருகன் திருக்கல்யாண வைபவம், வள்ளியூர் முருகன் காலையில் கோ ரதம்,
இரவு பல்லக்கு சேவை, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல். உத்திர மாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திர சேகரர் புறப்பாடு
* நவ.4, ஐப்பசி 18: திருவோண விரதம், பொய்கையாழ்வார் திருநட்சத்திரம், சிருங்கேரி ஜகத்குரு வித்யா சங்கர சுவாமிகள் தேர், சிக்கல் சிங்கார வேலர் வள்ளி, தெய்வானையுடன் இந்திர விமானத்தில் பவனி, வள்ளியூர் முருகன் ஏக சிம்மாசனத்தில் பவனி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் ஊஞ்சல், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு
* நவ.5, ஐப்பசி 19: கிருத யுகாதி, அட்சய நவமி, பூதத்தாழ்வார் திருநட்சத்திரம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் டோலோற்ஸவம், சிக்கல் சிங்கார வேலர் விடையாற்று உற்ஸவம், சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்
* நவ.6, ஐப்பசி 20: பேயாழ்வார் திருநட்சத்திரம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல், உத்திர மாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு, நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் பவித்ர உற்ஸவம், கரிநாள்
* நவ.7, ஐப்பசி 21: மாயவரம் கவுரிநாதர் கடைமுக உற்ஸவம், அழகர்கோவில் கள்ளழகர் ரட்சாபந்தனம், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், கிருபானந்த வாரியார் நினைவு நாள்