அரசுக்குரிய வரி கட்டாமல் ஏமாற்றுவோர் பலர். ஆனால் இச்செயல் கண்டிக்கத்தக்கது. ”யாவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். எவனுக்கு வரியைக் கட்ட வேண்டுமோ அவனுக்கு வரியையும், எவனுக்கு பயப்பட வேண்டுமோ அவனுக்கு பயப்படவும் செய்யுங்கள்” இந்த வசனத்தின் படி அரசு நிர்ணயித்த வரியை கட்டுவது மக்களின் கடமை. வரியால் நமக்கு என்ன லாபம் என பலரும் நினைக்கின்றனர். அது பற்றி கவலைப்படாதீர்கள். ஆட்சி, அதிகாரத்தில் தவறு செய்பவர்கள் நியாயத் தீர்ப்பு நாளில் கடவுளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். எனவே முறையாக வரி செலுத்துவோம். அரசு யந்திரத்தை செயல்பட நாம் துணை நிற்போம்.