கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் சந்தேகப்படுவது சில குடும்பங்களில் இருக்கலாம். ”இவர் வீட்டுக்கு தாமதமாக வருகிறாரே! குடிக்கிறாரோ! வேண்டாத நபர்களோடு பழகு கிறாரோ! உண்மையான சம்பளத்தை மறைக் கிறாரோ” என சந்தேகப்படும் பெண்கள் ஒருபுறம். ”கொடுக்கும் பணத்தை தன் அம்மா வீட்டுக்கு கொடுக்கிறாளோ! வீட்டில் நாம் இல்லாத நேரத்தில் ஊர் சுற்றுகிறாளோ” என ஆண்களும் சந்தேகப்படுகின்றனர். ஆனால் இப்படி சந்தேகப்படுபவர்கள் வாழ்வை தாங்களே அழிக்கின்றனர். ”நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமாய் இருங்கள்” ஆண்டவர் கொடுத்த வாழ்வை நம்பிக்கையுடன் அணுகுங்கள். அப்போது தான் மனநிம்மதி நிலைக்கும்.