தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா ஒன்பது நாட்கள் நடந்தன. தினமும் பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம், விபூதிகாப்பு,சந்தன காப்பு உட்பட சிறப்பு அலங்காரம் நடந்தது. முக்கிய விழாவான சூரசம்ஹாரத்தை தொடர்ந்து மறுநாள் விநாயகர் முன்னிலையில் தெய்வானை கல்யாணமும், அடுத்த நாள் வள்ளி கல்யாணமும், சிறப்பு பூஜையும் நடந்தது.சண்முக அர்ச்சனைக்கு பிறகு முருகபெருமான் தெய்வானை வள்ளி சமேதகராக புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்தார். கோவிலை வந்தடைந்ததும் சிறப்பு தீபாராதனை பின் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றது.