Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவை காருண்யாவில் வரும் 10ல் சிறப்பு ... குருத்வாராவில் மோடி வழிபாடு குருத்வாராவில் மோடி வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி
எழுத்தின் அளவு:
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி

பதிவு செய்த நாள்

09 நவ
2019
11:11

 புதுடில்லி : அயோத்தி வழக்கில் சர்ச்சை நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகராத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஷியா வாரியம் மற்றும் வக்பு சன்னி அமைப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம் என்றும் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் அங்கு இருந்ததாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. 12 -16 ம் நூற்றாண்டிற்குள் சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. ராமர் நம்பிக்கை கேள்விக்கு இடமில்லை. ராமர் நம்பிக்கை விவாதம் மற்றும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டது.சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோரும் விவகாரத்தில் முடிவு செய்ய முடியும். ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையில் விவாதத்திற்கு உள்ளாக்க முடியாது. ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. இந்த வழக்கில் தொல்லியல் துறையின் ஆதாரங்களை புறம் தள்ள முடியாது. இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறை கட்டிடம் அல்ல. சர்ச்சைக்குரிய கட்டிடம் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம் உள்ளது. வரலாறு, மதம், சட்டம் என்பதை கடந்து அயோத்தி விவகாரத்தில் உண்மை பயணித்துள்ளது. நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது.

ராமர் கோயில் கட்ட அனுமதி : அலகாபாத் ஐகோர்ட், நிலத்தை 3 ஆக பிரித்துக் கொடுத்தது தவறு. இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ள மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோஹி வழக்கு தள்ளுபடி. நிலத்திற்கு உரிமை கோரும் ராம்லல்லாவின் மனு மட்டுமே ஏற்க கூடியது. அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந்தம். இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும். அயேத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை மத்திய அரசிடம் இருக்க வேண்டும். நிலத்தை பராமரிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். நிலத்தை மூன்றாக பிரிக்கும் அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவு செல்லாது. சர்ச்சைக்குரிய இடத்தில் 3 மாதங்களில் கோயில் கட்ட மத்திய அரசு டிரஸ்ட் அமைக்க வேண்டும். அயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்படும். அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar