பதிவு செய்த நாள்
12
நவ
2019
12:11
சிதம்பரம்:சிதம்பரத்தில் நேற்று (நவம்., 11ல்) நடந்த ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரையில் ஐய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில், ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரை, சென்னையில் துவங்கியது. கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைத்தார்.கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக ஐயப்ப ரத யாத்திரை நடந்தது. அயோத்தி பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக ரதம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில், இரு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இதை அடுத்து, நேற்று (நவம்., 11ல்) காலை, பந்தலம் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, வல்லம்படுகை சென்றது.
அங்கு பக்தர்கள் தீபாராதனை செய்து வழிப்பட்டனர். தொடர்ந்து ஐயப்ப ரதம், தில்லைக் காளியம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடந்தது. ரத யாத்திரை நிறைவு நிகழ்ச்சி, நடராஜர் கோவில் கீழசன்னதி அருகில் நடந்தது.விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடந்தது. இதில் சேவா சமாஜம் மாநில தலை வர் நடராஜன் பிரபு, மாநில செயலாளர் சிவராமன், யாத்திரை பொறுப்பாளர் சிதம்பரம் அப்பாவு பங்கேற்றனர்.