கடலுார் அயோத்தியில் ராமர் கோவில்: செங்கற்கள் அனுப்பி வைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2019 12:11
கடலுார்:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, இந்து தமிழ் கட்சி சார்பில், பூஜை செய்யப்பட்ட செங்கற்கள் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. அதை யொட்டி ராமர் கோவில் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் கடலுாரில் இருந்து இந்து தமிழ் கட்சி சார்பில், செங்கற்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் நடநத்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் உதயக்குமார் தலைமை தாங் கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பரணிதரன் முன்னிலை வகித்தார். நேற்று (நவம்., 11ல்) காலை ராமேஸ்வரம் ரயிலில் செங்கற்கள் அனுப்பி வைக்கப்பட்டன.