அன்னுார்:ஐப்பசி மாத, பவுர்ணமி நாளன்று, இறைவனை அன்னத்தால் அலங்கரித்து வழிபட் டால், செல்வமும், சுபிட்சமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.மன்னீஸ்வரர் கோவிலில், 12ம் தேதி மாலை 5:00 மணிக்கு, கலச பூஜை, அபிஷேக பூஜை நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு, அன்ன த்தால் மன்னீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.