பதிவு செய்த நாள்
13
நவ
2019
03:11
புதுப்பட்டு:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பட்டு ஊராட்சியில் உள்ளது, தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில். இந்த கோவில் வளாகத்தில் உள்ள தர்ம சாஸ்தா அய்யப்ப சுவாமி, மஞ்சமாதா தேவி, பரிவார தெய்வங்களுக்கு வரும், 15ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இன்று 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விக்ரஹங்கள் கரிக்கோலமும், இரவு, 7:00 மணிக்கு, அய்யப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்துதலும் நடைபெறும். பின், நாளை, காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடைபெறும்.
நாளை மறுநாள் 15ம் தேதி, காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள், அய்யப்பனுக்கு விமான கும்பாபிஷேகமும், அய்யப்பன், விநாயகர், கருப்பன்ன சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், தொடர்ந்து 12:00 மணிக்கு, மஹா அபிஷேகமும் நடைபெறும்.இரவு, 12:00 மணிக்கு, அய்யப்பனுக்கு, ஜோதி தரிசனம் நடைபெறும்.