பதிவு செய்த நாள்
13
நவ
2019
03:11
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில், சீனிவாச பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கூடுவாஞ்சேரி, சீனுவாசபுரம் ராமு தெருவில், பத்மாவதி தாயார் சமேத சீனுவாச பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில், சமீபத்தில் திருப்பணிகள் முடிந்தன. தவிர, பத்மாவதி தாயார், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் நுாதன உற்சவர் சிலைகளும், பிரதிஷ்டை செய்யப்பட்டன.
தொடர்ந்து, இக்கோவிலில், கும்பாபிஷேக விழா, 10ம் தேதி நடைபெற்றது. இதில், கூடுவாஞ்சேரி யைச் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.