Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியரின் காவல் தெய்வம் கிளியை மன்னித்த சிவன்
முதல் பக்கம் » துளிகள்
மாங்கல்ய பலம் தரும் ரேணுகா
எழுத்தின் அளவு:
மாங்கல்ய பலம் தரும் ரேணுகா

பதிவு செய்த நாள்

17 மார்
2021
05:03

திருமணம் என்பது  ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை ஒப்பந்தம். வாழ்வில் சொந்தங்கள் சரியாக அமையாவிட்டாலும் வாழ்க்கைதுணை எனும் பந்தம் சரியாக இருந்தால் போதும் உலகையே வளைத்து விடலாம். மாறாக கிரக தோஷத்தால் பிரிந்து தவிப்போருக்கு வாழ்வு தர காத்திருக்கிறாள் சவுண்டாட்டி எல்லம்மா என்னும் ரேணுகா தேவி. கர்நாடகாவின் பெல்காமுக்கு அருகிலுள்ள இக்கோயிலை ஒருமுறை தரிசித்தாலும் பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும்.     


 ஜமதக்னி  என்னும் முனிவரின் மனைவி ரேணுகாதேவி. அவள் ஒருநாள் தண்ணீர் கொண்டு வர குளத்திற்கு சென்றாள்.  களிமண்ணால் பானை செய்து அதிலேயே தண்ணீர் எடுத்து வருவது அவளது வழக்கம். அன்று வான் வழியே கந்தர்வன் ஒருவனது நிழலை நீருக்குள் கண்டாள். ஒருகணம் அவனது அழகில் மயங்கினாள். உடனே அவளது பானை தண்ணீரில் கரைந்தது. மீண்டும் பானை செய்ய முயற்சித்தும் பலனில்லை. ஜமதக்னி முனிவர்  ஆத்ம சக்தியால் குளத்தில் நடந்ததை அறிந்தார். கோபத்துடன் மனைவியின் தலையை கோடரியால் வெட்டும்படி மகனான பரசுராமனுக்கு உத்தரவிட்டார். அவனும் தந்தையின்  கட்டளையை ஏற்று தலையை துண்டித்தான். அதற்கு ஈடாக வரம் அளிப்பதாக ஜமதக்னி வாக்கு கொடுத்தார். வரத்தின் பலத்தால் பரசுராமன் மீண்டும் தாயை உயிர் பெறச் செய்தான். இந்த ரேணுகாதேவியே இங்கு மூலவராக இருக்கிறாள்.


பொம்மப்ப நாயக்கர் 1514ம் ஆண்டில் இங்குள்ள சித்தார்த்த பர்வத் குன்றில் கோயிலைக் கட்டினார். சாளுக்கிய, ராஷ்டிரகூட கலைபாணியில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அம்மனின் வெட்டப்பட்ட தலை மட்டுமே கருவறையில் உள்ளது. அம்மனுக்கு எல்லம்மா என்றும் பெயருண்டு. சத்தியமா என்னும் அம்மனுக்கும் சிறுகோயில் இங்குள்ளது. அதனை தரிசித்த பிறகே பக்தர்கள் ரேணுகாதேவியை தசிரிக்கின்றனர். விநாயகர், மல்லிகார்ஜூனர், சித்தேஸ்வரர், பரசுராமர், ஏகநாதர் சன்னதிகள் பிரகாரத்தில் இங்குள்ளன. பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தபின் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புடவை சாத்துகின்றனர்.
எப்படி செல்வது
* பெங்களூரிலிருந்து பெல்காம் செல்லும் வழியில் தார்வார் என்னும் இடத்திலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் சென்று சவுண்டாட்டியை அடையலாம். அங்கிருந்து 5 கி.மீ.,
* பெல்காமிலிருந்து 78 கி.மீ.,

 
மேலும் துளிகள் »
temple news
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே ... மேலும்
 
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar