2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி கோவில் தைத்திருநாள் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2025 11:01
தஞ்சாவூர், - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி பெருமாள் கோவில் உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்ய தேசமாகும். இங்கு பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ஆழ்வார்களால் பாடல் பெற்றதும், நாலாயிர திவ்வியப்பிரபந்தம் எனும் தமிழ்ப்பாடல் தொகுப்பு கிடைக்க பெற்றதுமான தலமாக இக்கோவில் கருதப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தில் தேரோட்டம் நடப்பது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு கடந்த 6ம் தேதி தைப்பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான, தைப்பொங்கல் இன்று (14ம் தேதி)தேரோட்டத்தை முன்னிட்டு,தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.