இடுக்கியில் இருந்து 10020 பக்தர்கள் மகரஜோதி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2025 11:01
மூணாறு; இடுக்கி மாவட்டத்தில் புல்மேடு உள்பட மூன்று பகுதிகளில் இருந்து 10020 ஐய்யப்ப பக்தர்கள் மகர ஜோதியை தரிசித்தனர்.
இடுக்கி மாவட்டத்தில் புல்மேடு, பருந்து பாறை, பாஞ்சாலி மேடு ஆகிய பகுதிகளில் இருந்து பொன்னம்பல மேட்டில் தெரியும் மகர ஜோதியை தரிசிக்கலாம். அதற்கு அப்பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் புல்மேட்டில் இருந்து 6420, பாஞ்சாலி மேட்டில் இருந்து 1100, பருந்து பாறையில் இருந்து 2500 பேர் என 10020 ஐய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க நேற்று மகரஜோதியை தரிசித்தனர்.