அவசியம் தான். ஒரு விஷயத்தை தவறு என முடிவெடுத்தால் மனம் அதை ஏற்க வேண்டும். இல்லாவிடில் மனம் வசப்படவில்லை என்பது பொருள். மனதை கட்டுப்படுத்தும் சக்தி புத்திக்கு இருக்க வேண்டும். அந்நிலையை அடைய கடவுளின் அருள் நமக்கு வேண்டும். இதனால் தான் ‘என் சிந்தை நீங்கா இறைவா போற்றி’ என்கிறார் திருநாவுக்கரசர்.