பதிவு செய்த நாள்
14
டிச
2021
01:12
ஸ்ரீவைகுண்டம்: நவதிருப்பதி கோயில்களில், வைகுண்ட ஏகாதசி திருப்பல்லாண்டு திருவிழா,வரும் ஜன. 3ம்தேதி துவங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி கோயில்களான ஸ்ரீவைகுண்டம் (கள்ளர்பிரான்), நத்தம் (எம்மிடர்கடிவான்), திருப்புளியங்குடி (காய்சினவேந்தபெருமாள்), தொலைவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), இரட்டைத்திருப்பதி (தேவர் பிரான்), பெருங்குளம் (மாயக்கூத்தர்), தென்திருப்பேரை (நிகரில்முகில்வண்ணன்), திருக்கோளூர் (வைத்தமாநிதிபெருமாள்), ஆழ்வார்திருநகரி (பொலிந்துநின்ற பிரான்) ஆகிய கோயில்களில் ைகுண்டஏகாதசி மார்கழி திருஅத்யயன திருவிழாபகல்பத்து, இராப்பத்து திருவிழாஎன 21 நாட்கள் நடக்கிறது. பகல்பத்து திருவிழா, ஜன. 3 ம் தேதி துவங்கி 12ம் தேதி வரைநடக்கிறது. திருவிழாமுதல்நாள் காலை 11:00 மணிக்கு சுவாமி கள்ளபிரான்தாயார்கள், ஆழ்வார்கள், ராமானுசர், மணவாளமாமுனிகள், ஆகியோருடன் சயன மண்டபத்திற்கு எழந்தருளி, திருபல்லாண்டு திருவிழா துவங்குகிறது.
தினசரி இரவு 7:00 மணிக்கு சேர்த்தியில்திருக்கோலம், இரவு 10:00மணிக்கு பல்லக்கில் திருக்கோலம், ஜன. 13ம் தேதி நவதிருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அன்று காலை 5:00 மணி முதல் பெருமாள், தாயாருடன் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிபார். இரவு 7:00மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று முதல், 11 நாட்கள் இராப்பத்து திருவிழாநடக்கும். இதில்10 நாட்கள் தினசரி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சுவாமி கள்ளபிரான் பக்தர்களுக்கு காட்சியளிபார், அதன் பின்இரவு 9:30மணிக்கு சிறப்பாக கற்பூரசேவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரிகள், கோயில் ஆய்வாளர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.