Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை சவுந்திரராஜ பெருமாள் ... கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா : ஏற்பாடுகள் தீவிரம் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல்!

பதிவு செய்த நாள்

22 ஜன
2026
12:01

காஞ்சிபுரம்: ஹிந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரதசப்தமியான, வரும் 25ம் தேதி தங்க தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி தங்க தேரோட்டம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், 36 கோடி ரூபாய் செலவில், புதிதாக தங்க தேர் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிச., 6ம் தேதி வெள்ளோட்டம் நடத்தப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் தங்க தேர் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ரதசப்தமியான வரும் 25ம் தேதி மாலை ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக தங்க தேரோட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கோவில் தரப்பில் கூறப்பட்டது. வரும் 25ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் தி.மு.க., கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனால்தான் தேரோட்டத்தை ரத்து செய்துள்ளனர். திட்டமிட்டபடி வரும் 25ம் தேதி தங்க தேரோட்டத்தை நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 


இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் குமரதுரை கூறுகையில், ‘‘தேரோட்டம் நடத்த கமிஷனர் அலுவலகத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வந்த பிறகுதான் உறுதியாக சொல்ல முடியும்,’’ என்றார். இதுகுறித்து ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளையினர் கூறியதாவது: தங்க தேரோட்டத்திற்கான ஏற்பாட்டை செய்யுமாறு நான்கு நாட்களுக்கு முன், வாய்மொழியாக கோவில் நிர்வாகத்தினர் உத்தரவு வழங்கினர். இந்நிலையில், நேற்று மதியம் திடீரென நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar