Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கஷ்டத்துக்கெல்லாம் விடிவு காலம் ... கிரிவலம் போவதற்கான காரணம்
முதல் பக்கம் » துளிகள்
குபேரனைப் போல வாழ ஆசையா...
எழுத்தின் அளவு:
குபேரனைப் போல வாழ ஆசையா...

பதிவு செய்த நாள்

02 மே
2022
12:05

செல்வத்திற்கு அதிபதியான குபேரன், தான் இழந்த செல்வங்களான சங்க, பதும நிதிகளை மீண்டும் பெற்ற நாள் ‘அட்சய திரிதியை’. பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடம் இருந்து அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் பெற்றது இந்த நாளில் தான். செல்வம் பெருகச் செய்யும் இந்த நன்னாளில் வழிபட வேண்டிய தெய்வமான அட்சய லிங்கேஸ்வரர் திருவாரூர் மாவட்டம் கீவளுரில் இருக்கிறார். இவரை தரிசித்தால் குபேரனைப் போல வாழும் யோகம் அமையும்.  


திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் முடிந்த பின், முருகன் படைவீரர்களுடன் இத்தலத்திற்கு வந்தார். சூரனைக் கொன்ற பாவம் தீர இங்கு சிவபூஜை செய்து விமோசனம் பெற்றார். கேடுகளை போக்கியருள்வதால் ‘கேடிலியப்பர்’  என்றும், வரங்களை அள்ளித் தருவதால் ‘அட்சய லிங்கேஸ்வரர்’ என்றும் சுவாமிக்கு பெயர் ஏற்பட்டது. சிவபூஜை செய்த முருகனுக்கு அசுர சக்திகளால் இடையூறு நேராதபடி காவல் காத்த பார்வதி,  தனி சன்னதியில்  ‘அஞ்சுவட்டத்தம்மன்’ என்னும் பெயரில் இருக்கிறாள். இங்குள்ள நடராஜர் இடது பாதத்தை ஊன்றி, வலது பாதத்தை துாக்கியபடி பத்து கைகளுடன் காட்சி தருகிறார்  இவரை ‘சின்ன வெள்ளியம்பலம்’ என்கின்றனர். திருமால், பிரம்மா, இந்திரன், அக்னி, எமன், சந்திரன், வாயு, வசிஷ்டர், மார்க்கண்டேயன், துன்மதி, சந்திரகுப்தன் ஆகியோர் இங்குள்ள சிவனை வழிபட்டு செல்வ வளம் பெற்றனர்.  இலந்தை தல விருட்சமாக உள்ளது.  பிரகாரத்தில் முருகன், பத்ரகாளி, அகத்தியர், விஸ்வநாதர், கைலாசநாதர், பிரகதீஸ்வரர், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், குபேரனுக்கு சன்னதிகள் உள்ளன.
சிவபூஜையைத் தொடங்கும் முன், முருகப்பெருமான் மஞ்சளில் விநாயகர் பிடித்து பிள்ளையார் பூஜை செய்தார். கீவளுரில் இருந்து சற்று துாரத்திலுள்ள ‘மஞ்சாடி’ என்னும் ஊரில் இந்த விநாயகருக்கு  கோயில் உள்ளது.  

செல்வது எப்படி
திருவாரூர் –  நாகப்பட்டினம் செல்லும் வழியில் 15 கி.மீ.,

 
மேலும் துளிகள் »
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar