வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் ரூ.14.43 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2022 11:09
தேனி, தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், கண்ணீஸ்வரமுடையார் கோயில் உண்டியல்களில் இருந்து ரூ.14.43 லட்சம் காணிக்கையாக கிடைத்தது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் கடந்த ஜூன் 10 முதல் நேற்று முன்தினம் வரை 12 உண்டியல்களில் நேற்று உதவி ஆணையர் கலைவாணன் தலைமையில் திறக்கப்பட்டது. செயல் அலுவலர் மாரிமுத்து, அறநிலையத்துறை தேனி ஆய்வாளர் கார்த்தி, அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். கல்லுாரி மாணவிகள், செயல் அலுவலக ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர். கவுமாரியம்மன் கோயில் 10 உண்டியல்களில் ரூ.13 லட்சத்து 73 ஆயிரத்து 565 பணமும், 270 கிராம் வெள்ளி, 143 கிராம் தங்கம் காணிக்கை பொருட்களை செலுத்தப்பட்டிருந்தன. கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் உள்ள 2 உண்டியல்களில் ரூ.69 ஆயிரத்து 550 என, இருகோயில்களிலும் ரூ.14.43 லட்சம் பணம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.