Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெயேந்திரர் ஆராதனை மகோத்சவம் காஞ்சி ... மாசி மகம்: காவிரி துலா கட்டத்தில் மக்கள்  முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு மாசி மகம்: காவிரி துலா கட்டத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திர கிரகணம்: நாளை (மார்ச் 03) வானில் அதிசய நிகழ்வாக நீல விளிம்புடன் சிவப்பு சந்திரனை பார்க்கலாம்
எழுத்தின் அளவு:
சந்திர கிரகணம்: நாளை (மார்ச் 03) வானில் அதிசய நிகழ்வாக நீல விளிம்புடன் சிவப்பு சந்திரனை பார்க்கலாம்

பதிவு செய்த நாள்

02 மார்
2026
12:03

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணம். இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. நிலா சிவப்பு நிறத்தில் ஒளிர்வதுடன், நீல விளிம்புடன் காட்சியளிக்கும் என, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டத் தலைவர் பிரபாகரன் கூறினார்.


அவர் மேலும் கூறியதாவது: முழு கிரகணத்தின் போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்கிறது. இதனால் நீல ஒளி சிதறுகிறது. சிவப்பு ஒளி மட்டும் சந்திரனை அடைகிறது. இதனால் சந்திரன் அடர் ஆரஞ்ச் நிறத்தில் தோன்றும். இது பிளட் மூன் எனப்படுகிறது.


சந்திரன், பூமி நிழலின் மையப்பகுதி வழியாக செல்லும். இம்முறை, அது அம்பிரா நிழலின் மேல் விளிம்பை தொட்டு மெதுவாக உரசிச் செல்லும். இதனால், சூரிய ஒளி பூமியின் உயர்ந்த வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தின் வழியாக செல்லும்.


அப்போது, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் உறிஞ்சப்படும். அடர் நீல நிறம் மட்டும் நிலவின் விளிம்பில் மெல்லிய கோடாக தோன்றும். சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். தெளிவாக காண தொலைநோக்கிகளை பயன்படுத்தலாம். அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயாவில் முழுமையாக காண முடியும்.


டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இறுதிப் பகுதி மட்டும் தெரியும். இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.


மிஸ் பண்ணிடாதீங்க!


2026ம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17ம் தேதி நிகழ்ந்தது. இது பகுதி நேர சூரிய கிரகணம் என்று அழைக்கப்பட்டது. தற்போது நாளை நீல விளிம்புடன் சிவப்பு சந்திரனை பார்க்கலாம். இதனை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar