கௌதம நதி கரையில் வள்ளலார் மகாராஜாவுக்கு திதி கொடுக்க வந்த அண்ணாமலையார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2026 06:03
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி கரையில் வள்ளலார் மகாராஜாவுக்கு, திதி கொடுக்க வந்த உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி கரையில் வள்ளலார் மகாராஜாவுக்கு, அண்ணாமலையார் சூலம் ரூபத்தில் தீர்த்தவாரியில் கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வள்ளலார் மகாராஜாவுக்கு, அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுவழிபட்டனர்.