Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசி ... கௌதம நதி கரையில்  வள்ளலார் மகாராஜாவுக்கு திதி கொடுக்க வந்த அண்ணாமலையார் கௌதம நதி கரையில் வள்ளலார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலுார் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

02 மார்
2026
05:03

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடலுார், தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசிமக திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சோலைவாழி மாரியம்மன், முதுநகர் முத்துமாரியம்மன், வண்டிப்பாளையம் மலைவாழியம்மன், சி.என்.பாளையம் முத்துமாரியம்மன் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட சுவாமிகள் காலை முதல், சிறப்பு அலங்காரத்தில் மேள தாளங்கள் முழங்க கடற்கரையில் எழுந்தருளினர்.  பின், சுவாமிகளுக்கு தீர்த்தவாரி, தீபாராதனை நடந்தது. குறிப்பாக, கங்கணாங்குப்பம் ஏழுகரக மாரியம்மன் சோளத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கடலில் குளிக்காமல் இருக்க போலீசார் தடுப்பு கட்டை அமைத்திருந்தனர். இருப்பினும் தடையை மீறி குளித்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏராளமானனோர் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்றதால் புதுப்பாளையம் மெயின்ரோடு, பீச்ரோடு, வண்ணாரப்பாளையம் நான்குமுனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இரண்டாம் நாளாக இன்று (3ம் தேதி) நடக்கும் மாசிமக தீர்த்தவாரியில் திருவந்திபுரம் தேவநாத சுவாமிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar