Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » மாத ராசி பலன்
கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) சிறந்த தானம் நிதானம்!
செப்டம்பர் 07,2012
அ-
+
Temple images

புரட்டாசி: பிறர் மனமறிந்து பேசி இதமுடன் செயல்படும் கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் இரண்டாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் உச்சம்பெற்ற சனியுடன் உள்ளார். செவ்வாய், ராகு, குரு, சுக்கிரன் அபரிமிதமான நற்பலன்களைத்தருவர். பிடிவாதத்துடன் செயல்படுவீர்கள். இதைத் தவிர்த்தால் மட்டுமே செயல்களில் வெற்றி கிடைக்கும். பேச்சில் நிதானத்தைப் பின்பற்றுவது அவசியம். வீடு, வாகனத்தில் தேவையான வளர்ச்சி மாற்றம் செய்வீர்கள். புத்திரர்களின் சேர்க்கை சகவாசம் அறிந்து நல்வழி நடப்பது அவசியம்.  உடல்நலம் சுமாராக இருக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்தால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழிலதிபர்கள் ஒப்பந்ததாரர்களிடம் கடினப்போக்கைப் பின்பற்றுவது கூடாது. உற்பத்தி, வருமானம் சுமாராகவே இருக்கும். வியாபாரிகள் சக வியாபாரிகளிடம் இணக்கமான போக்கை கடைபிடிப்பது அவசியம். விற்பனை சிறந்து லாபம் பெறும் சூழ்நிலை உருவாகும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்பட்டாலும் வருமானத்திற்குக் குறைவிருக்காது. குடும்பத்தின் முக்கிய தேவை நிறைவேற்ற தேவையான பணம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவருடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. செலவுக்குத் தேவையான பணம் சீராக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணிகளை நிறைவேற்றி நற்பெயரும் உரிய சலுகைப்பயன் பெறுவர். அவரவர் பொருளாதாரத்திற்கேற்ப ஆடை, ஆபரணச்சேர்க்கை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நன்மதிப்பு கிடைத்து ஆதரவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். விவசாயிகள் தாராள மகசூல் பெறுவர். கால்நடை வளர்ப்பிலும் லாபம் கூடும். மாணவர்கள் நண்பர்களுடன் பொழுதுபோக்குவதைத் தவிர்ப்பதால் மட்டுமே தேர்ச்சி கூடும்.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
உஷார் நாள்: 1.10.12 மாலை 6.11- 4.10.12 காலை 5.17.
வெற்றி நாள்: அக்டோபர் 9, 10
நிறம்: சிவப்பு, நீலம் எண்: 1, 8

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.