ஆயுதங்களை இழந்து நின்ற சமயத்தில், அவனைக் கொல்லாத ராமன், “நீ சீதையை என்னிடம் ஒப்படைத்து விட்டால் போதும். போர் வேண்டாம். ÷ பாரைத் தொடர விரும்பினால், மீண்டும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வா. இப்போது உயிருடன் செல்ல அனுமதிக்கிறேன்,’ ’என்றார். ராவணனுக்கு அவமானமாக இருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. சீதையை ராமனிடம் ஒப்படைத்தால் ‘கோழை ராவணன்’ என்று உலகோர் எதிர்காலத்தில் பழிப்பார்கள் என்பதால், வீரனாக மடியவே எண்ணினான். ஆயுதங்களுடன் மீண்டும் வந்தான். ராமனுடன் போரிட்டு மடிந்தான். கடைசி வரை முயற்சித்து தோற்றவன் என்ற புகழை அடைந்தான். ராவணன் கெட்ட காரியத்திற்காக முயற்சி எடுத்தான். நாம் நல்வழியில் நம் செயல்களில் வெற்றி பெற முயற்சி எடுத்தால், புகழ் தானாக வந்து சேரும்.