Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடைசி வரை முயற்சித்து தோற்றவன்! ஆன்மிக சுற்றுலாவில் பல கோயில்களுக்கு செல்வதால் அதிக பலன் கிடைக்குமா? ஆன்மிக சுற்றுலாவில் பல ...
முதல் பக்கம் » துளிகள்
குருவாயூர் கோயிலில் குந்துமணி வைத்து பிரார்த்தனை செய்வது ஏன் தெரியுமா?
எழுத்தின் அளவு:
குருவாயூர் கோயிலில் குந்துமணி வைத்து பிரார்த்தனை செய்வது ஏன் தெரியுமா?

பதிவு செய்த நாள்

10 நவ
2017
03:11

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குந்துமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும் குழந்தை வரம் வேண்டியும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள் மீண்டும் அதிலேயே போட்டு விடுகிறார்கள். குருவாயூர் கோயிலில் இந்த விசேஷமான பிரார்த்தனையின் பின்னணியில் ஒரு சுவையான கதை உண்டு. முன்னொரு காலத்தில் ஒரு வயதான ஏழைப் பெண்மணிக்கு குருவாயூரப்பன் இஷ்ட தெய்வம், அவர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் வசித்து வந்தார். பண வசதி இல்லை. ஆனால், ஏதாவது காணிக்கை கொடுத்து பாலகிருஷ்ணனைத் தரிசிக்க விரும்பினார். அவர் வீட்டில் இருந்த மஞ்சாடி (குந்துமணி) மரத்திலிருந்து உதிரும் குந்துமணிகளைச் சேகரித்துச் சுத்தம் செய்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தார்.

ஒருநாள் ஆவல் மிகுதியில் கண்ணனைக் காண நடந்தே செல்லத் தீர்மானித்து. பயணம் மேற்கொண்டார். ஒரு மண்டலம் பயணம் செய்து அவர் குருவாயூரை அடைந்தபோது, கோயிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் முதல் நாள் அன்று அந்த ஊர் அரசன் தன் பக்தியின் வெளிப்பாடாக கோயிலுக்கு ஒரு யானையைச் சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள் அரசன் வருகையால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர். சேவர்களின் அஜாக்கிரதையால் அந்தப் பெண்மணி கீழே தள்ளப்பட்டார். பை கீழே விழுந்து குந்து மணிகள் சிதறின. அதேசமயம் கோயிலுக்குச் சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓடியது. கோயில் பொருட்களை நாசம் செய்தது. பதற்றத்துடன் குருவாயூரப்பனிடமே பிரஸ்னம் கேட்டனர். அப்போது கர்ப்பக்ருஹ்த்திலிருந்து, “நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்து குந்துமணிகள் எனக்கு வேண்டும்” என்று அசரீரி கேட்டது. கீழே சிதறிக் கிடந்த குந்துமணிகளை அனைவரும் பொறுக்கி எடுத்து அந்தப் பெண்மணியிடம் கொடுத்து மன்னிப்புக் கேட்டனர். அவரை சகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஆசையுடன் அதை அப்பனிடம் சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது. அவருடைய நினைவாகவே இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குந்துமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
ஹூப்பள்ளி நகரின் கோகுலம் சாலையின் காந்தி நகரில் வரலாற்று பிரசித்தி பெற்ற பலமுறி கணபதி கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
தாய் மனம் குளிர தமிழில் அர்ச்சனை நடக்கும் பெருமைக்குரியது ஆதிசக்தி மாரியம்மன் கோவில். இது, ... மேலும்
 
temple news
பெங்களூரில் பல்வேறு பகுதிகளில், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனி சிறப்பு கொண்டவை. வரலாற்று ... மேலும்
 
temple news
நகரத்திற்குள் பழமையான கோவில்கள் இருப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட பழமையான கர்நாடக கோவில்கள் பற்றி ... மேலும்
 
temple news
பெங்களூரு – கனகபுரா பிரதான சாலையில், சுப்பிரமண்யபுரா வசந்தபுராவின் குப்தகிரி மலையில், ஸ்ரீவசந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar