Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அதிர்ஷ்டம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) உயர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) உயர்வு

பதிவு செய்த நாள்

15 மே
2018
05:05

மனசாட்சியுடன் நடக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் 5-ம் இடத்தில் இருக்கும் குருவால் சுப பலன் அதிகரிக்கும். சுக்கிரனால் மே 16க்கு பிறகும், புதன் மே 21 வரையிலும் உயர்வு தருவார். ராசிக்கு 2-ல் உள்ள ராகு, 12-ல் உள்ள சூரியன், 8-ல் இணைந்துஇருக்கும் கேது, செவ்வாய் ஆகியோரால் நன்மையை எதிர்பார்க்க முடியாது.

குருவால் குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். அன்றாட வாழ்வில் குyPலம் காண்பீர்கள்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மே16க்கு பிறகு பொன், பொருள் சேரும்.

ஜூன் 10க்கு பிறகு சமூகத்தில் மரியாதை கூடும். அதே நேரம் மே 24,25ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். அவர்களிடம் நெருக்கம் வேண்டாம். மே 15, ஜூன் 10,11 ல் உறவினர்கள் வகையில் இணக்கம் அதிகரிக்கும்.

அவர்களால் முன்னேற்றம் உண்டாகும். மே 18,19 ஜூன் 14ல் பெண்களால் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். புதனால் ஜூன் 6க்கு பிறகு பிரச்னை வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். மாதத்
தொடக்கத்தில் புதனால் முயற்சியில் வெற்றி உண்டாகும். மே 21க்கு பிறகு எதிரியால் தொல்லை வரலாம். மே 29,30ல் எதிர்பாராத வகையில் வருமானம் இருக்கும். மே16,17,20,21, ஜூன் 12,13 ஆகிய நாட்களில் சந்திரனால் விரயம் ஏற்படலாம். சனி, ராகுவால் அவ்வப்போது அலைச்சல் குறுக்கிடும். ஜூன் 10க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி மூலம் நிதியுதவி எளிதாக கிடைக்கும்.

பணியாளர்களுக்கு பணி இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். மே 21க்கு பிறகு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாகும். சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறை வேறும். சூரியன் உங்கள் ராசிக்கு 12-ல் இருப்பதால் திடீர் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ஜூன் 10க்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஜூன் 7,8,9 ஆகிய நாட்கள் சிறப்பானதாக
அமையும்.

கலைஞர்கள் தொடர்ந்து ஸ்திரதன்மையில்  இருப்பர். சுக்கிரனால் குறுக்கிட்ட எதிரி தொல்லை, போட்டிகள், அவப்பெயர் மே 16க்கு பிறகு மறையும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஜூன் 10ந் தேதிக்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். மே26,27,28ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை பயன் உள்ளதாக அமையும். மே 21க்கு பிறகு சிரத்தை எடுத்து படித்தால்
மட்டுமே வளர்ச்சி உண்டாகும்.

விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்களுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம். தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் மே21 க்குள் கைகூட வாய்ப்பு உண்டு. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், மனதிருப்தியும் கிடைக்கும். வியாபாரம்
செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறைவிருக்காது. மே 22,23ல் புத்தாடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர்
வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம்.மே 31,  ஜூன் 1,2ல் அனுகூல பலன் உண்டாகும். சகோதர வழியில் நன்மை சேரும். செவ்வாயால் உஷ்ண, பித்தம், மயக்கம் போன்ற உபாதை ஏற்படலாம்.

* நல்ல நாள்: மே 15,18,19, 22,23,29,30,31
ஜூன் 1,2,7,8,9,10,11,14
* கவன நாள்: ஜூன் 3,4 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,3
* நிறம்: மஞ்சள், வெள்ளை

* பரிகாரம்:
●  வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு
●  தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் அர்ச்சனை
●  திங்களன்று சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar