Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: புரட்டாசி மாத பலன் மிதுனம்: புரட்டாசி மாத ராசிபலன் மிதுனம்: புரட்டாசி மாத ராசிபலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
ரிஷபம்: புரட்டாசி மாத பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2026
03:09

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, புரட்டாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம். பதவி உயர்வு கிடைக்கும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும். யோகக்காரகன் ராகுவால் வருமானம் உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தனாதிபதி புதன் செப். 23 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உடல் நிலையில் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அவ்வப்போது சில சங்கடம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது. மாணவர்கள் சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வதும் தவறான நண்பர்களை விட்டு விலகுவதும் அவசியம்.


சந்திராஷ்டமம்: செப். 19. அக். 16.

அதிர்ஷ்ட நாள்: செப். 24, 28. அக். 1, 6, 10, 15.

பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட வாழ்வில் ஏற்பட்ட தடைகள் விலகும்.


ரோகிணி: எதிர்காலம் பற்றிய சிந்தனையுடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் லாபாதிபதியான குருபகவான் சகாய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து களத்திரம், பாக்யம், லாப ஸ்தானங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். கூட்டுத்தொழிலில் சுமூகமான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். வராமல் இருந்த பணம் வரும். செய்து வரும் தொழில் லாபம் தரும். புதிய முயற்சி வெற்றி அளிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும். கேது சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். நிர்வாகத்தினர் உங்களிடம் புதிய வேலைகளை ஒப்படைப்பர். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். வேலைபளுவின் காரணமாக இருக்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கும் சிலர் முயற்சி மேற்கொள்வீர். வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். மனநிம்மதி உண்டாகும். புதன் சஞ்சாரம் மாதத்தின் பிற்பகுதியில் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறிய சங்கடம் அல்லது மனதில் ஏதேனும் குழப்பம் கவலை என ஏற்படும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும், எடுக்கும் வேலைகளில் நிதானமாகவும், பண விவகாரத்தில் கவனமாகவும், பயணத்தில் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நேரத்திற்கு சாப்பிடுவதும் துாங்குவதும் உடல்நிலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பெண்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும். எதிர்பார்த்த வரவு வரும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது.


சந்திராஷ்டமம்: செப். 19, 20. அக். 17.

அதிர்ஷ்ட நாள்: செப். 24, 29. அக். 2, 6, 11, 15.

பரிகாரம்: ஏழுமலையானை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். ரத்தக்காரகன் யுத்தக்காரகனான செவ்வாய் மாத தொடக்கத்தில் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் வேகமும் கோபமும் இருக்கும். 

எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்பதால் குடும்பத்தின் மீதும் அக்கறை இல்லாமல் போகும். சிலருக்கு வேலையிலும் தொழிலிலும் எதிர்ப்பு அதிகரிக்கும். உடல்நிலையிலும் பின்னடைவு ஏற்படும். உழைப்பிற்கேற்ற லாபமில்லை என்ற வருத்தம் ஏற்படும். செப். 20 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் குருவுடன் இணைவதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். உடலில் ஏற்பட்ட பிரச்னை நோய் நொடி என்பது எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். செல்வாக்கும் அந்தஸ்து உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உருவாகும். அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் உயரும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த விளைச்சலால் லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளரின் ஒத்துழைப்பு ஏற்படும். விற்பனையில் ஏற்பட்ட மந்த நிலை மாறும். வரவு அதிகரிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளும் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளும் விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு சொந்த இடம் வீடு அமையும். வீட்டில் நவீன பொருட்கள் சேரும். தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை இருக்கும். மாணவர்களுக்கு படிப்பின் அக்கறை உண்டாகும்.


சந்திராஷ்டமம்: செப். 21.

அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24, 27. அக். 6, 9, 15.

பரிகாரம்: வள்ளி தெய்வானை சமேத முருகனை வழிபட நல்லது நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar