Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : ஆவணி ராசி பலன் ரிஷபம்: புரட்டாசி  மாத பலன் ரிஷபம்: புரட்டாசி மாத பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மேஷம்: புரட்டாசி மாத பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2026
03:09

அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து மனதில் குழப்பத்தையும், உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்துவார். யோகக்காரகன் ராகு முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் மாற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்த்த வருமானத்திற்கு வழி அமைப்பார். உங்கள் செல்வாக்கு அந்தஸ்தை உயர்த்துவார். எடுத்த வேலைகளில் வெற்றிக்கு வழிவகுப்பார்.  ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிறரால் முடிக்க முடியாத வேலைகளையும் எடுத்து முடித்து அதில் லாபம் காண முடியும். செப். 23 வரை ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் புதனால் பொருளாதாரம் உயரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். உடன் இருப்போரின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலை சீராகும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடியும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்.


சந்திராஷ்டமம்: அக். 13, 14.

அதிர்ஷ்ட நாள்: செப். 18, 25, 27. அக். 7, 9, 16.

பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.


பரணி: பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் தன குடும்பாதிபதியும் சப்தமாதிபதியுமான சுக்கிரன் அக். 9 வரை சப்தம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நட்பு வட்டம் விரிவடையும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆசையின் காரணமாக சிலருக்கு எதிர்பாலினர் வழியே பிரச்னைகளும் நெருக்கடிகளும் உருவாகும். ராசிநாதன் சூரியன் மாதம் முழுவதும் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்தவிதமான பிரச்னைகள் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள். செல்வாக்கு உயரும். எடுத்த வேலை வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட போட்டி பிரச்னை நெருக்கடி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலை சீராகும். வழக்கு ஜெயமாகும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் மறைமுகத் தொல்லை விலகும். உடலையும் மனதையும் வாட்டிய சங்கடம் விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை, உத்தியோகத்தில் தோன்றிய நெருக்கடி எல்லாம் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வீண் செலவு குறையும். மனதில் நிம்மதி உண்டாகும். துாக்கமின்றி தவித்தவர்களுக்கு நிலை மாறும். சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கிடக் கூடிய நிலை உருவாகும். செப். 20 வரை ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். விவசாயிகளுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். பெண்களுக்கு வேலையில் ஏற்பட்ட பிரச்னை குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வயதானவர்கள் ஆரோக்கியமாக செயல்படக் கூடிய நிலை உருவாகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும்.


சந்திராஷ்டமம்: செப். 18. அக். 14, 15.

அதிர்ஷ்ட நாள்: செப். 24, 27. அக். 6, 9. 

பரிகாரம்: ஆறுமுகனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


கார்த்திகை 1 ம் பாதம்: எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். பூர்வ புண்ணியாதிபதியான சூரியன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி பிரச்னை போராட்டம் குழப்பம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உறவினருடன் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எடுக்கும் முயற்சி வெற்றி தரும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலக ஆரம்பிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தடைபட்ட வேலை, இழுபறியாக இருந்த வழக்கு முடியும். வெளிவட்டாரத்தில்  செல்வாக்கு உயரும். செப். 23 வரை வித்யா காரகன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். பணப்புழக்கம் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் லாபம் கூடும். எதிர்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பதும், புதிய நண்பர்களிடம் குடும்ப ரகசியங்களை பேசாமல் இருப்பதும் நல்லது. விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.  எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட குழப்பம் விலகும். யோகாதிபதியால் பொன் பொருள் சேரும். கையில் பணம் புரளும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோர் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும்.


சந்திராஷ்டமம்: செப். 18. அக். 16.

அதிர்ஷ்ட நாள்: செப். 19, 27, 28. அக். 1, 9, 10.

பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 
temple news
சித்திரை 3, 4 ம் பாதம்: உழைப்பும் திறமையும் நம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar