Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: புரட்டாசி மாத ராசிபலன் சிம்மம்: புரட்டாசி மாத ராசிபலன் சிம்மம்: புரட்டாசி மாத ராசிபலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கடகம்: புரட்டாசி மாத ராசிபலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2026
04:09

புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் தன, புத்திரக்காரகன் குரு அலைச்சலையும் இடமாற்றத்தையும் உண்டாக்கினாலும், அவருடைய பார்வைகள் 5, 7, 9 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும் உறவினர் மத்தியில்  செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் தீரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி பிரச்னை விலகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். சிலருக்கு சொந்த வீடு மனை என்ற கனவு நனவாகும். பெரியோரின் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். சிலருக்கு சில நேரங்களில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். குடும்பத்தினர் ஆதரவும் வாழ்க்கைத்துணையின்அன்பும் கிடைக்கும். பொன் பொருள் சேரும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உருவாகும். விவசாயிகளுக்கு கடுமையான நெருக்கடி இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் போராடி வெற்றி பெற வேண்டிய நிலை உண்டாகும். மாணவர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.


சந்திராஷ்டமம்: செப். 23, 24.

அதிர்ஷ்ட நாள்: செப். 20, 21, 29, 30. அக். 2, 3, 11, 12.

பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட நன்மைகள் நடக்கும்.


பூசம்: வாழ்க்கையில் எத்தனை நெருக்கடி வந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து நின்று வெற்றி பெறக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் கடந்த மாதம் வரை கிடைத்து வந்த யோகமான பலன்கள் இந்த நேரத்தில் கிடைக்காமல் போகும். ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவின் 9 ம் பார்வை பாக்கிய ஸ்தானத்திற்கு கிடைப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். சூரியன் மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நேற்றைய முயற்சி எல்லாம் முடியும். அரசுவழி செயல்பாடுகள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட பிரச்னை, சட்ட சிக்கல், போராட்டம் முடியும். சுக்கிரன் அக். 9 வரை சுக ஸ்தானத்திலும் அதன்பின் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வரவேண்டிய பணம் வரும்.  தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு செல்வாக்கு உயரும். பொன் பொருள் வாகனம் என்ற கனவு நனவாகும். யோகக்காரகன் ராகு பகவானால் திடீர் வருமானமும் அதிர்ஷ்ட வாய்ப்பும் சிலருக்கு தேடி வரும். அந்நியரால் லாபம் கிடைக்கும். கையில் பணம் புரளும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னை விலகும். விவசாயிகளுக்கு புரட்டாசி மாதம் போராட்டமான மாதம். கவனம் தேவை. மாணவர்களுக்கு செப். 23 முதல் படிப்பின் மீது அக்கறை கூடும்.


சந்திராஷ்டமம்: செப். 24, 25.

அதிர்ஷ்ட நாள்: செப். 20, 26, 29. அக். 2, 8, 11, 17.

பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.


ஆயில்யம்: திட்டமிடுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். செப். 23 முதல் வித்யாகாரகன் புதன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் அறிவு விருத்தியாகும். புத்திசாலித்தனம் வெளிப்படும். தடைபட்ட வேலை உங்கள் சாமர்த்தியத்தால் செய்து முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்குவதற்காக வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு சூழ்நிலை சாதகமாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். தந்தைவழி உறவுகள் ஆதரவால் எடுத்த வேலை வெற்றியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். கையில் பணம் புரளும். பெண்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் விலகும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். விவசாயிகள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்.


சந்திராஷ்டமம்: செப். 25, 26.

அதிர்ஷ்ட நாள்: 20, 23, 29. அக். 2, 5, 11, 14.

பரிகாரம்: பார்த்தசாரதியை வழிபட வேண்டுதல் பலிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 
temple news
சித்திரை 3, 4 ம் பாதம்: உழைப்பும் திறமையும் நம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar