புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலின் திருப்பணியில் கருப்பமுத்து என்பவர் வேலை செய்தார். ஒருநாள் அவர் வெளியே சென்ற போது மழை வர நனைந்தபடியே நின்றார். சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார் கருப்பமுத்து. முதியவர் ஒருவர் நடுங்கியபடி வருவதைக் கண்டார். அவரிடம்,’உங்களுக்கு சுருட்டு வேண்டுமா?’ எனக் கேட்டார் கருப்ப முத்து. அவரும் வாங்கி விட்டு உடனே சென்று விட்டார். அதன் பின் கருப்பமுத்து கோயிலுக்குச் சென்ற போது, முருகனுக்கு அருகில் சுருட்டு இருப்பதைக் கண்டார். இதை கண்ட மக்கள் இனிமேல், மாலை பூஜையில் முருகனுக்கு சுருட்டு படைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர். புதுக்கோட்டை மகாராஜா இதற்கு தடை விதித்தார். அவரது கனவில் ஆறுமுகத்துடன் தோன்றிய முருகன்,’உதவி செய்யும் மனப்பான்மை மனிதனுக்கு வேண்டும் என்பதை உணர்த்துவதே என் எண்ணம். அதனால் தடை சொல்லாதே” என ஆணையிட்டார்.