சோப் தயாரிக்க எண்ணெய் தேவை. எண்ணெய் பட்ட இடத்தை சுத்தம் செய்ய சோப் தேவை. வாழ்வின் முரண்பாடு இது தான்.
நாடக அரங்கில் முன்வரிசையில் அமர விரும்புகிறோம். தியேட்டரில் பின்வரிசையை தேர்வு செய்கிறோம்.வாழ்வில் உங்களது நிலை உறுதியானது அல்ல.
வெள்ளம் வரும் போது எறும்புகளை மீன்கள் தின்னும். வெள்ளம் வடிந்த பின் மீன்களை எறும்புகள் தின்னும். காலத்தின் முடிவுக்காக காத்திருங்கள். கடவுள் அனைவருக்கும் வாய்ப்பு தருவார்.
பிரச்னை என்பது வாழ்வின் முடிவு அல்ல; ஒரு சிறிய வளைவு தான். துன்பம் தற்காலிகமானது; அதைக் கடக்கும் வரை காத்திருங்கள்.
ஆரம்பத்தில் அக்கறை காட்டுவதை விட, கடைசி காலத்தில் அன்புடன் கவனிப்பது அவசியம். ஆரம்பத்தை விட முடிவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
சரியான மனிதரை தேடுவதை விட, கிடைத்தவரிடம் சரியான உறவு முறையை உருவாக்குவது நல்லது.மனிதனை புரிந்து கொள்ளாதவரை, இணக்கமாக பழக முடியாது.
மற்றவர் உணர்ச்சிகளுடன் விளையாடாதீர். இதில் ஒருவேளை வென்றாலும், அந்த மனிதரை வாழ்நாள் முழுவதும் இழப்பீர்கள். விட்டுக் கொடுத்தால் வாழ்வில் நிம்மதிக்கு குறைவிருக்காது.
கடவுள் கொடுப்பார்; மன்னிப்பார். ஆனால் மனிதன் பெறுவான், மறந்து விடுவான். நன்றியுணர்வும் மன்னிக்கும் பக்குவமும் தெய்வீக குணங்கள்.
ஒரு பிரச்னையை சமாளிக்க எத்தனை முறை முயற்சித்தீர்கள், எத்தனை முறை முயற்சிக்கவில்லை என இரு தீர்வுகள் மட்டுமே உண்டு. தீர்க்க முடியாத பிரச்னை இல்லை. முயற்சியைப் பொறுத்து முடிவு அமையும்.
பெருமழை வாழ்வின் சவால்களை நினைவுபடுத்துவதால் லேசான மழையைக் கேட்காதீர்கள். நல்ல குடைக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பிரச்னையைக் கண்டு புலம்பாதீர்கள்; தீர்வுக்கான வழியைத் தேடுங்கள்.
வெற்றியை எட்டிப்பிடிக்க ’எஸ்கலேட்டர்கள்’ (மின்படிக்கட்டு) கிடையாது. படிகள் மட்டுமே உள்ளன. முயற்சி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது
குறிக்கோளை அடைவதில் பைத்தியமாக இருங்கள். சாதித்ததை எண்ணி குழந்தை போல மகிழ்ச்சி கொள்ளுங்கள். பைத்தியக்காரன், குழந்தை மட்டுமே உலகில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.