Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: குழந்தை வேலாயுதசுவாமி
  அம்மன்/தாயார்: வள்ளி தெய்வானை
  ஊர்: சொர்ணமலை
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை தமிழ்ப் புத்தாண்டு, வைகாசி விசாகம், தைப்பூசம், சூரசம்ஹாரம் பங்குனி உத்திரம், கிருத்திகை  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி ஞான வடிவமாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், பழநி முருகனைப் போல் காட்சிதருவதும் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில் காளம்பாளையம், சொர்ணமலை, கோயம்புத்தூர்.  
   
    
 பொது தகவல்:
     
  கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், விநாயகர் சன்னதியுடன் கூடிய மண்டபம், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர் சன்னதியுடன் கூடிய மண்டபம், மலைப்பாதை படிப்பாதை உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  செல்வம் பெருகவும், புத்திரபேறு இல்லாத தம்பதியினர் குழந்தை வேலாயுதனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  முருகனுக்கு பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் குருந்தமலை, துய்யமலை, பாசிமலை, தண்டிமலை ஆகிய மலைகளுக்கு நடுவே மணிமுத்தா நதியின் தென்புறம் காளம்பாளையம் என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. சொர்ணமலை. தூய காற்றும் அமைதியும் நிலவும் இம்மலையில் ஏராளமான சித்தர்கள் தங்கி தவம் செய்ததாகவும் இன்றளவும் அவர்களுடைய நடமாட்டம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இம்மலை மீது அமைந்துள்ள குழந்தை வேலாயுதசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள் ஹோய்சாள மன்னர் காலத்தை நினைவூட்டுகின்றன. அரசு வருவாய்துறை ஆவணங்களில், மலையைச் சுற்றியுள்ள நிலங்களுக்கு எல்லைகளாக நான்கு திசைகளிலும் தேர்வீதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு பாண்டவர் காலத்து வீடுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மலையைச் சுற்றிலும் கிராமங்கள் இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி ஞான வடிவமாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், பழநி முருகனைப் போல் காட்சிதருவதும் சிறப்பாகும் கருவறை விமானமும் பழநி முருகன் கோயிலில் இருப்பதைப் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியரும் சூரியனும் கார்கோடன், புஜங்கள் எனும் நாகங்களும் பூஜித்த தலமிது. முருகனின் வாகனங்களில் மயிலுக்கும் நாகத்திற்கும் ஒரு தனிச் சிறப்புண்டு அல்லவா! இம் மலையினும் சுற்றியுள்ள இடங்களிலும் மயில்கள் தோகை விரித்து ஆடுவது கண்கொள்ளாக் காட்சி. ராஜ நாகம் ஒன்று இன்றும் இத்தலத்தை வலம் வருவதாகவும், அதைக் கண்டு தொழுதவர் வாழ்வில் சகல சவுபாக்யங்கள் பெறுவதாகவும் சொல்கிறார்கள். 
இம்மலையைச் சுற்றியுள்ள வயல்வெளிகள் பசுமையாகவும் செழிப்புடனும் விளங்குகின்றன. ஞான பண்டிதனாக அருளாட்சி புரியும் முருகனை வணங்கி நின்ற மாணவச் செல்வங்கள் கல்வியில் சிறப்பிடம் பெறுகின்றனர். திருவிழாவில் பஜனையும், பக்திச் சொற்பொழிவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவ்விழாவில் மலையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் கோவை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் போன்ற நகர்ப் பகுதிகளிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மலைமீது வாகனங்கள் செல்ல மலைப்பாதையும் 393 படிகள் கொண்ட படிப்பாதையும் உள்ளன.
படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி ஞான வடிவமாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், பழநி முருகனைப் போல் காட்சிதருவதும் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.