Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காயத்ரி
  ஊர்: வேடப்பட்டி
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம், நரசிம்ம ஜெயந்தி, அனுமத் ஜெயந்தி, நவராத்திரி, பிரதிஷ்டாதினம் என அனைத்து விழாக்களும் சிறப்பு அலங்காரம் பூஜைகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  ஐந்து முகங்களுடன், பத்துகரங்களுடன் காயத்ரி அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  ருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில், வேடப்பட்டி கோவை.  
   
    
 பொது தகவல்:
     
  காயத்ரி சன்னதியின் இடதுபுறம் லட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார். நரசிம்மரின் ஒருபுறம் கருடாழ்வாரும் மறுபுறம் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது அரிதான ஒன்றாகும். ரம்ய கணபதி, ஆஞ்சநேயர், கல்யாண முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவகிரகம் என எழிலுடன் அமைந்துள்ளன சன்னதிகள் கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், ஐஸ்வர்யம் பெருகவும், வேண்டுதல்கள் நிறைவேறவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

இங்கு பிரதானமாக கொலுவீற்றிருக்கும் காயத்ரி அம்மன், ஐந்து முகங்களுடன் பத்துக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அங்குசம், கபாலம், தாமரை, கசை, ஏடு என ஏந்தி வெண்தாமரை மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றார். ஐந்து முகங்களும் ஐந்து நிறங்களைக் கொண்டவை. அவை ஞானம், மனதைக் கட்டுப்படுத்துதல், உயர்ந்த குணங்கள், ஐஸ்வர்யம் தரக்கூடிய வல்லமை, உயர்ந்த குணங்கள், ஐஸ்வர்யம் தரக்கூடிய வல்லமை, உயர்ந்த ஆன்மிக ஞானம் என ஐந்து பண்புகளைக் குறிப்பவை என்பர்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் சனி மற்றும் ஞாயிறு அன்று ராதா மாதவ திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கணபதி, துர்க்கை, தன்வந்திரி, மிருத்யுஞ்சய, ஆஞ்சநேயர் நரசிம்மர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, நவகிரக குபேர, காயத்ரி ஹோமங்களுடன் சிறப்பு வழிபாடுகளும் நடந்து வருகின்றன. இந்த ஹோமங்கள் தொடர்ந்து நடை பெற்று வருவதால் கூடுதல் அதிர்வுகள் இக்கோயிலில் வியாபிப்பதில் வியப்பேதுமில்லை. இத்தலத்தில் அமர்ந்து தியானிக்கும்போது கூடுதல் அதிர்வுகளையும், உடனடி பலனையும் உணர முடியும்.

 
     
  தல வரலாறு:
     
 

வேதமந்திரங்கள் அனைத்துக்கும் தாயாகப் போற்றப்படும் பெருமைக்கு உரியது காயத்ரி மந்திரம். எனவே இதனை வேதமாதா என்றும் அழைப்பர். காயத்ரி மந்திரம் சூரிய வழிபாட்டைக் குறிப்பது. பிரபஞ்சம் இருப்பதற்குக் காரணமானவரும் உயிர்கள் வாழ்வதற்குரிய ஆற்றலை அளிப்பவரும் துன்பங்களை எல்லாம் போக்கி இன்பத்தை அளிப்பதும் எமது அறிவினைத் தூண்டி தெய்வ சக்தியினை நிறைவாக்கி எம்மை சரியான பாதையில் இட்டுச் செல்வதுமான ஒளிக்கடவுளை நான் தியானிக்கிறேன் என்பதே இதன் பொருள்.

இம்மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர், விஸ்வாமித்திரர். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள் உண்டு. இம்மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும் நண்பகலில் சாவித்ரிக்காகவும் மாலைச் சந்தி நேரத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.  மந்திர வழிபாட்டில் முதல் இடம் காயத்ரிக்குத்தான். இதற்குப் பின்தான் மற்ற மந்திரங்களை ஜபிக்க வேண்டும் 27, 108, 1008 தடவை முறைப்படி காயத்ரி மந்திரத்தை ஜபித்தால், முழுப்பலனை அடைவதோடு எந்த ஓர் ஆபத்தும் அண்டாது என்பர். காலையிலும் மாலையிலும் கதிரவனை நோக்கி அமர்ந்து இதை ஜபம் செய்வது பூர்ண பலனைத் தரும். ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து வயதினரும் இம் மந்திரத்தை ஜபிக்கலாம். காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 அட்சரங்கள் 24 வகையான பேறுகளை அளிக்க வல்லது.

காயத்ரி மந்திரத்தின் அதிர்வுகள் பிராண சக்தியினை ஈர்த்து அளிக்க வல்லவை. பிராண சக்தியே ஒருவருடைய உடல், மனம், புத்தி ஆகியவற்றின் ஆற்றலுக்குக் காரணமானது. காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவர் பிராண சக்தியினை அதிகமாகப் பெறுவர். ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு, மனோசக்தி, ஞானம் இருப்பது போல், இந்தப் பிரபஞ்சத்தின் முழு ஞான ஆன்ம சக்தியின் அலைவடிவம் தான் காயத்ரி மந்திரம் என்பார்கள். மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவதிலிருந்து. இதன் மகத்துவத்தை நாம் உணரலாம் மகிமைமிக்க காயத்ரி மந்திரத்தினையே காயத்ரி மாதாவாக வழிபடும் வழக்கம் நம்மிடம் உள்ளது என்றாலும் காயத்ரி தேவிக்கான கோயில்கள் மிக அபூர்வமாகவே உள்ளன. அந்த வகையில் காயத்ரி தேவிக்கு கோவை வேடபட்டியில் ஓர் அழகிய ஆலயம் அமைந்துள்ளது.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஐந்து முகங்களுடன், பத்துகரங்களுடன் காயத்ரி அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.