Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு ராஜமாரி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ராஜமாரி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ராஜமாரி அம்மன்
  அம்மன்/தாயார்: ராஜமாரி அம்மன்
  ஊர்: ஒன்னிப்பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ராஜமாரியம்மனுக்கு துணையாக தனிச்சன்னிதியில் பத்திரகாளியம்மனும் வீற்றிருக்கிறாள். இவளுக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை சிறப்பாக நடக்கிறது. பிராகாரத்தில் துர்க்கை, பார்வதி மற்றும் மகாலட்சுமி, சப்தகன்னியர் அருள்கின்றனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும், அமாவாசையன்றும் இரவு சிறப்பு பூஜையுடன் அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் ஏக விசேஷம். எட்டு ஊர் மக்களின் குலதெய்வமான ராஜமாரியம்மனுக்கு வருடந்தோறும் தை மாதத்தில் பூச்சாட்டு விழா பதினைந்து நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  கோயிலின் முகப்பில் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார் கருப்பராயன். கையில் அரிவாளை தாங்கியிருந்தாலும், அவர் முகத்தில் ஆனந்தப் புன்சிரிப்பு மிளிர்வது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு ராஜமாரி அம்மன் திருக்கோயில், ஒன்னிப்பாளையம்- 641019, காரமடை ரோடு, பிளிச்சி ஊராட்சி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் கோயம்புத்தூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 98422 72280,97508 42500 
    
 பொது தகவல்:
     
  விழாக்காலங்களில்  இங்குள்ள கருப்பராயனுக்கு விசேஷ பூஜையும், படையலும் உண்டு. இவரிடம் வேண்டினால் துஷ்டர்களும், நம்பிக்கை துரோகிகளும் நம்மை விட்டு விலகுவர் என்பது நம்பிக்கை. இங்குள்ள விநாயகர் சம்பந்தமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. பல வருடங்களுக்கு முன் கோயில் பொருட்களை திருடுவதற்காக திருடர்கள் வந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை கோயிலின் முன்புறம் அமர்ந்திருந்த பிள்ளையார் முன்கூட்டியே அறிந்து, அம்மனிடம் தெரிவிக்க, அவர்கள் திட்டம்  நிறைவேறவில்லை. ஆத்திரமுற்ற கள்வர்கள், அங்கிருந்த பிள்ளையாரின் தலையை வாளால் வெட்டி விட்டார்கள். அதைக் கண்டு கடுங்கோபமுற்ற ராஜமாரியம்மன், அந்தத் திருடர்களை சபித்து கல்லாக்கிவிட்டார். தலை வெட்டுப்பட்ட இந்தப் பிள்ளையாரை தலைவெட்டி பிள்ளையார் என்று அழைக்கிறார்கள். கோயிலின் முன்புறம் இன்றும் இவரை தரிசிக்கலாம்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண பாக்கியம் கிட்டாதவர்கள், ராஜமாரியம்மனுக்கு திருக்கல்யாணம் செய்து வைப்பதாக நேர்ந்து கொண்டால், அம்மனின் ஆசி கிட்டி, திருமணம் விரைவில் நடந்தேறும். அம்மை நோய், கண்நோயினால் பாதிக்கப்பட்டோர் இவளை வேண்டி குணம் பெறுகிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  திருமண பாக்கியம் கிட்டாதவர்கள், ராஜமாரியம்மனுக்கு திருக்கல்யாணம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இப்பகுதியில் உள்ள ஒன்னிபாளையம், ஒன்னிபாளையம் புதூர், கரிச்சிபாளையம், சென்னி வீரம்பாளையம், கள்ளிபாளையம் உள்ளிட்ட எட்டு ஊர் மக்களை மட்டுமன்றி, தன்னை நாடிவரும் அனைவரையும் நோய்நொடி, துக்க துயரங்களின்றி காத்துவருகிறாள், ஒன்னிபாளையம் ராஜமாரியம்மன்.  
     
  தல வரலாறு:
     
  பல வருடங்களுக்கு முன், ஒன்னிபாளையத்தில் வசித்த மக்கள், சத்தியமங்கலம் அருகிலிருக்கும் கொத்தமங்கலத்திற்குச் சென்று அங்கே கோயில் கொண்டிருந்த அம்மனை வழிபட்டு வந்தனர். அங்கு விவசாயம் செழித்தும், மக்கள் வசதி வாய்ப்போடும் இருப்பதற்கு அந்த அம்மனே காரணம் என நம்பினர். அதுபோல் நம் ஊரிலும் ஒரு கோயில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணினர். அதை அந்த அம்மனிடமும் கோரிக்கையாக வைத்தனர். அச்சமயத்தில் ஒருநாள், ஒன்னிபாளையத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவரை ஆட்கொண்ட அம்மன், நான் கொத்தமங்கலத்துக்காரி இப்போது உங்கள் ஊரில் நிலைகொள்ள வந்திருக்கிறேன். எனக்கு இங்கு கோயில் எழுப்பினால், சுற்றியுள்ள எட்டு ஊர்களையும் ஏகபோகமாக வாழவைப்பேன் என்று அருள்வாக்குக் கூற, அப்படி அமைந்ததுதான் ஒன்னிப்பாளையம் ராஜமாரியம்மன் கோயில். துவக்கத்தில் சிறிய ஓலைக்குடிலில் அம்மனை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். ராஜமாரியம்மன் அருளால் அந்த சுற்றுவட்டார மக்கள் வாழ்வு செழிக்க, கோயில் படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அன்னையை கொத்தமங்கலத்து தாய், ஆயிரங்கண்மாரி என்றெல்லாம் அழைக்கிறார்கள் பக்தர்கள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கோயிலின் முகப்பில் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார் கருப்பராயன். கையில் அரிவாளை தாங்கியிருந்தாலும், அவர் முகத்தில் ஆனந்தப் புன்சிரிப்பு மிளிர்வது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.