Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாலமுருகன்
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  ஊர்: சென்னாமலை
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வாரத்தில் செவ்வாய், சனிக்கிழமைகளிலும், கிருத்திகை மற்றும் முக்கிய பண்டிகை தினங்களில் மட்டுமே கோயில் திறந்திருக்கும். கிருத்திகையன்று பத்து வகையான பொருட்கள் கொண்டு விசேஷ அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பாலமுருகனின் அருள் பெறுகின்றனர். வருட விழாக்களில் தைப்பூசம் இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கொடியேற்றுத்துடன் இவ்விழா துவங்குகிறது. தைப்பூச நன்னாளில் சுற்றிலும் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். மதியம் மூலவர் பாலமுருகனுக்கும், வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று, அதன் பின்னர் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  பழநி முருகனைப் போல் இத்தல பாலமுருகனும் மேற்குப் பார்த்து அருள்புரிவது சிறப்புமிக்கதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 வாரத்தில் 2 நாட்கள் மட்டும். சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் தான் காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். கிருத்திகை அன்று காலை 10 மாலை 3 திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், சென்னாமலை, சிறுமுகை ரோடு , மேட்டுப்பாளையம் அஞ்சல். கோயம்புத்தூர். 641 301  
   
போன்:
   
  +91 99761 555 74 
    
 பொது தகவல்:
     
  மேட்டுப்பாளையம் - சிறுமுகை - பிரதான சாலையில், அழகிய தோரணவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விநாயகர் மற்றும் வீரமாத்தி அம்மன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து சற்று தூரம் நடந்தால் நான்கு சக்கர வாகனம் செல்ல மண்சாலையும், படிக்கட்டு வழியும் துவங்குகிறது. மலை உச்சியில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் கொண்டு மேற்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் பாலமுருகனின் அழகு தரிசனம் கிட்டுகிறது. அர்த்த மண்டபத்தில் விநாயகர் வீற்றிருக்க, கோயிலின் எதிரே மயில் வாகனமும், அதையடுத்து கொடிமரமும் உள்ளது. இம்மலைக்கோயில் வனப்பகுதியில் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி நான்கைந்து பேர் குழுவாகச் சேர்ந்து வந்தே வழிபடுவது பாதுகாப்பானது.  
     
 
பிரார்த்தனை
    
  ஏழு செவ்வாய்க்கிழமைகள் இவரை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். எதிரிகளின் தொல்லை நீங்கும், தொழில் முன்னேற்றம் அடையும் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
 
    
 தலபெருமை:
     
  இந்த முருகனின் மகிமை குறித்து பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் நடந்த சினிமா படப்பிடிப்பு எதிர்பாரா தடைகளால் பாதிக்கப்பட்டன. செய்வதறியாது வருந்திய தயாரிப்பாளர், தனது நண்பரொருவரின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து முருகனை வழிபட்டுச் சென்றுள்ளார். உடனே தடைகள் மளமளவென விலகி, படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்தன. அத்திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியடைந்ததை அடுத்து அந்தத் தயாரிப்பாளர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிதண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த விவரம் இன்றும் கல்வெட்டாக உள்ளது. பழநி முருகனைப் போல் இத்தல பாலமுருகனும் மேற்குப் பார்த்து அருள்புரிவதும், அங்கு சண்முகா நதி ஓடுவது போல், இங்கு பவானி நதி மலையின் அடிவாரத்தை தொட்டுச் செல்வதும் இத்தலத்தின் கூடுதல் சிறப்பு.  
     
  தல வரலாறு:
     
  மேட்டுப்பாளையத்தில் ஈசான்ய மூலையில் ஈசனின் இளையபிள்ளை முருகன் கோயில் கொண்ட தலம், சென்னாமலை. சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. அமைதியை நாடிய ஒருவர் சென்னாமலை உச்சியில் குடிசை அமைத்து, தங்கி தவம் செய்து வந்தார். இரவு நேரங்களில் ஓம் ஓம் என்ற ஒலி கேட்க, அங்கே முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக இருப்பதை உணர்ந்தார். ஆறுமுகன் மீது அதீத பக்தி கொண்டதன் விளைவாக ஆற்றல் அதிகமாகி, ஒற்றை ஆளாக ஒரு கிணறைத் தோண்டினார். முருகனுக்கு சிறிய சிலை வடித்து, பிரதிஷ்டை செய்து, கிணற்று தீர்த்தத்தால் தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, ஆசைதீர வழிபட்டு வந்தார். சில நாட்களுக்குப் பிறகு முருகனுக்கு சிறிய சன்னதி அமைத்து, சுற்றிலும் கற்சுவர் எழுப்பினார். நாளடைவில் முருகப்பெருமானுக்கு மலைமேல் சன்னதி இருப்பதை அறிந்த பலரும் அங்கு சென்று பாலமுருகன் என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தனர். பாலமுருகனின் அருட்திறத்தால் அநேகர் பலனடைய, அவர்கள் ஒன்றுசேர்ந்து திருப்பணிக்குழு அமைத்து புதிய கோயிலைக் கட்டி தற்போதுள்ள சிலையை 1977-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பழநி முருகனைப் போல் இத்தல பாலமுருகனும் மேற்குப் பார்த்து அருள்புரிவது சிறப்புமிக்கதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar