Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நாகசக்தி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு நாகசக்தி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நாகசக்தி அம்மன்
  உற்சவர்: விநாயகர், முருகன் நாகம்மன்
  அம்மன்/தாயார்: நாகசக்தி அம்மன்
  தல விருட்சம்: பொன்னரஸமரம்
  தீர்த்தம்: நாகதீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சக்தம் சதுர்வேத பூஜை
  புராண பெயர்: நாகமலை குன்று
  ஊர்: மலுமாச்சம்பட்டி
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதிமாதம் அமாவாசை, சத்ருசம்ஹார பூஜையாகம், சித்திரை பவுர்ணமி, ஆடிவெள்ளி, கார்த்திகை தீபம், மாசிமாதம் 1008 கலச பூஜை, பிரதிவாரம் வெள்ளிக்கிழமை, ஞாயிறு பூஜை நடைபெறுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  பசும்பால் நீலநிறமாக மாறுதல், நிலவேம்பு மூலிகைபால் தருதல், புத்திர பாக்கியம், 32அடி உயர மஹா பைரவர் சிலையும் இங்கு சிறப்புமிக்கதாக போற்றப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நாகசக்தி அம்மன் திருக்கோயில், 84, நாகசக்தி அம்மன் நகர், நாகமலை குன்று, கெம்பஇண்டியா ஸ்டாப், மலுமாச்சம்பட்டி 641050. கோயம்புத்தூர்  
   
போன்:
   
  +91 96555 99936, 98434 38377 
    
 பொது தகவல்:
     
  வடநாடுகோபுர அமைப்பில் அமைந்துள்ளது. அரைவட்ட தியானமண்டபம், பதினெட்டு சித்தர்கள் பூஜை, புத்தர், திருவள்ளுவர், வள்ளலார், ராமனாந்த சுவாமிகள், சீரடிசாய்பாபா, போகர் சித்தர் முன்மண்டபம், 18 படிகள் ஏறி öகோயிலுக்கு செல்லும் படி அமைப்பும், 32 அடி உயர மஹா கால பைரவர் சிலையும் அமைந்துள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  புத்திரபாக்கியம் வேண்டியும், ராகுகேது தோஷம் நீங்கவும், கடன்தொல்லை, மனவியாதி, திருமணத்தடை, தொழில் விருத்தி, தீராத வியாதிகள் என அனைத்து பிரச்சனைகளுக்காக பிரார்த்திக்கின்றன. இங்கு கூட்டுப்பிரார்த்தனையும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும், வெள்ளியில் கண்அடக்கம், திருமணமுடிந்த பின்பு தாலிகாணிக்கையாக செலுத்தவும், நோய் தீர்த்த பின்பு, எடைக்கு எடை அரிசிதானம் வழங்கவும், சத்ருசம்ஹார யாகத்திற்கு நெய்தானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  பல வருடங்கள் நாகசக்தி அம்மன் வழிபாடு நடைபெறுகிறது. எத்தனை வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தாலும், திருமணத்தடை ஏற்பட்டிருந்தாலும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பால் அபிஷேகத்தில் பங்கு பெற்று நமது கையில் கருவறை சென்று பால் அபிஷேகம் செய்து வந்தால் நன்மைகள் கிடைக்கும். போகர் சித்தரின் ஆசிபெற்ற சித்தர் ஸ்ரீபாபுஜீ பூசை செய்யும் இடம், பன்றிகாய்ச்சில், டெங்குகாய்ச்சல், மக்கள் அவதிபட்ட வேளையில் நாகசக்தி அம்மன் சித்தர் கனவில் தோன்றி 28.5.2009 அன்று கனவில் தோன்றி நிலவேம்பு செடி காண்பித்து அதன்பிறகு நிலவேம்பு கஷாயம் உலகம் முழுவதும் பரவியது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பசும்பால் நீலநிறமாக மாறுதல், நிலவேம்பு மூலிகைபால் தருதல், புத்திர பாக்கியம், 32அடி உயர மஹா பைரவர் சிலையும் இங்கு சிறப்புமிக்கதாக போற்றப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar