Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாதேஸ்வரர்
  ஆகமம்/பூஜை : காமிக ஆகமப்படி பூஜைகள்
  ஊர்: ஆர் எஸ் புரம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சோமவாரம், பிரதோஷம், பவுர்ணமி, ஐப்பசி மாத பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி உற்சவம் வருடப் பெருவிழாவாகும். அன்றிரவு நடைபெறும் 4 கால பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வதுடன் தங்கள் கைகளால் ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர். ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு அலங்காரங்களில் ஜொலிக்கின்றார். இத்தலத்தின் தனி முத்திரை ராஜ அலங்காரம் தான்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில், ஆர் எஸ் புரம், கோயம்புத்தூர்.  
   
போன்:
   
  +91  
    
 பொது தகவல்:
     
  கோபுரம், விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பன ஒரு கோயிலின் பிரதான அடையாளங்கள். ஆனால் இவற்றில் ஒன்று கூட இல்லாமல் சாதாரண ஓடுகள் வேய்ந்த கூரையின் கீழ் 300 ஆண்டுகள் தொன்மையான ஒரு சிவன் கோயிலில் மாதேஸ்வரர் சுவாமி லிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? உண்மை அப்படி ஒரு சிவன்கோயில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் தடாகம் சாலையில் பால் கம்பெனி எதிரே அமைந்துள்ளது. இக்கோயில் திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பெற்றது என்பது உறுதி செய்யும் வண்ணம் திப்பு சுல்தான் காலத்தில் செப்புப் பட்டயம் உள்ளது. 1932 ஆண்டில் அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட வரை படத்தில் இக்கோயிலும் அருகே உள்ள கிணறும் இடம்பெற்றுள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
   உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்காக இங்கு பிரார்த்திக்கின்றன.
 
    
 தலபெருமை:
     
   நித்ய பூஜைக்கு எந்தக்குறைவுமில்லாமல் நடந்து வந்தது. ஆனால் கோயில் மட்டும் எந்தவித திருப்பணி, விரிவாக்கம் இன்றி தொன்மை குன்றாமல் பாதுகாத்து வருகின்றனர். கோயில் அளவையும் தோற்றத்தையும் வைத்து இறையாற்றலை அளவிட முடியாது என்பதற்கு இத்தலம் ஒரு சிறந்த உதாரணம். மேலும் விழாக்காலங்களில் அதிக அளவில் கலந்து கொள்ளும் பக்தர்களே சான்று. ஓடு வேய்ந்த கூரையுடைய வீட்டின் அமைப்பில் உட்பகுதியில் சிறிய கருவறை நடு நாயகமாக அமைந்திருக்கின்றது. இதற்குத் தென் புறத்தில் 300 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய அரசமரத்தடியில் முழுமுதற் கடவுளான விநாயகர், ஆஞ்சநேயர் பிணையல் நாகம் மற்றும் இரு சிவலிங்கங்கள் அருள்பாலிக்கின்றனர்.

கருவறையில் மாதேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளி இருக்க எதிரே மிகத் தொன்மையான தோற்றத்தைக் கொண்ட நந்தி அமர்ந்துள்ளார். சிறிய கோவிலாக இருந்தாலும் பூஜை முறைகளிலோ அலங்கார ஆராதனைகளிலோ எந்த வித குறையும் காணமுடியாது. காமிக ஆகமப்படி பூஜைகள் நடந்து வருகின்றன.  உடல் நலக் குறைவால் துன்பப்படும் கால் நடைகளை கோயிலுக்கு அழைத்து வந்து ஈசனின் முன் நிறுத்தி பூஜை செய்து தீர்த்தம் தெளித்தால் விரைவில் குணம் அடைந்து விடும். மாட்டுப் பொங்கலன்று இப்பகுதியில் இருக்கும் கால்நடைகளை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி பூஜை செய்யும் வைபவம் காண்கொள்ளக் காட்சியாகும். மேலும் கன்று ஈன்ற பசுவின் முதல் பாலை ஈசனுக்கு அபிஷேகத்திற்கு கொடுத்த பின்பு தான் வேறு காரியத்துக்கு பயன்படுத்துவர்.
 
     
  தல வரலாறு:
     
  கர்நாடகா மாநிலத்தில் மைசூரில் உள்ள மலையில் துறவி ஒருவர் இருந்தார். குடில் ஒன்றை அமைத்து தியானம் பூஜைகளை மேற்கொண்டிருந்தார். அத்துடன் விஷக்கடி வைத்தியத்தில் நிபுணத்துவத்துடன் திகழ்ந்தார். குறிப்பாக கால் நடைகளுக்கு விஷக்கடி வைத்தியத்தில் அப்பகுதி மக்களுக்கு ஒரு வரமாகத் திகழ்ந்தார். இந்நிலையில் ஒரு நாள் ஜீவமுக்தி அடைந்தார். இது அப்பகுதி மக்களுக்கும் கால் நடைகளுக்கும் பேரிழப்பாக ஆனது. அம்மலையில் அவர் முக்தியடைந்த இடத்தில் ஒரு சமாதி அமைத்து அதன்மீது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மாதேஸ்வரர் என்ற திருநாமத்தில் பூஜித்து வந்தனர்.

மைசூர் பகுதி திப்பு சுல்தான் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலம், கொங்கு மண்டலம், கேரளாவின் வடபகுதி மற்றும் கர்நாடகாவின்  கடலோர பகுதியில் ஆட்சி செலுத்தி வந்ததுடன் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தார். அக்கால கட்டத்தில் குதிரைப் படை வீரர்கள் கேரள பகுதிக்கு கொங்கு மண்டலம் வழியாகச் செல்வது வழக்கம். இவ் வழியாகச் செல்லும் போது இரவு நேரங்களில் தற்போது கோயில் உள்ள இடத்தின் அருகே உள்ள அரச மரத்தடியில் தங்கி, உணவு தயாரித்து உண்டு. இளைப்பாறிச் செல்வர். அருகில் இருந்த கிணறு வீரர்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்தது. குதிரை படை வீரர்களில் முஸ்லீம் மற்றும் இந்துக்கள் ஆகியோர் அடங்குவர். முஸ்லீம் வீரர்கள்  தற்போது பி1, காவல் நிலையம் அருகே உள்ள சிறிய மசூதியில் தங்குவர். இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இங்கு தங்கி இளைப்பாறுவார்கள்.

மைசூரில் இருந்தபோது பூஜித்த மாதேஸ்வரரை நினைத்து வணங்கியதோடு நில்லாமல் அவருக்கு என ஒரு சிறிய லிங்கத்தை நிறுவி பூஜித்து வந்தனர். ஒவ்வொரு முறைவரும் போதும் சிறிய அளவில் கோயிலை விரிவாக்கம் செய்து வந்தனர். மேலும் சுற்றுவட்டாரத்தில் அப்போது சிவன்கோயில் ஏதும் இல்லை. சுற்றுப் பகுதியில் வசித்த மக்கள் இக்கோயிலிற்கு வரத் தொடங்கினர். முழு முதற்கடவுள் நாகம் ஆகியவற்றுக்கு தனியே சிலைகள் அரசமரத்தடியில் நிறுவி வழிபட்டனர். சிவலிங்கத் திருமேனிக்கு ஒரு சிறிய கருவறை அமைத்து பின் ஓடு வேய்ந்த கூடம் அமைத்தனர். பார்வைக்கு ஒரு வீடு போன்றே தோற்றமளிக்கும். ஆங்கிலேயர் தொடுத்த போரில் திப்புசுல்தான் 1799 ம் ஆண்டு மரணமடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் குதிரை வீரர்கள் வருகையும் நின்று விட்டது. ஆனால் சுற்றிலும் வசிக்கும்  மக்கள் தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர்.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம்
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.